தீனதயாளன் வீட்டில் குவியல் குவியலாக சோழர்கால சிலைகள் பறிமுதல்- சுபாஷ் கபூரிடம் விசாரணை
சென்னை: சென்னையில் சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளன் பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. சிலைகள் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் என்ற சர்வதேச சிலை கடத்தல்காரன் பங்களாவில் இருந்து, 100க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிலை கடத்தல் விவகாரம் ஒவ்வொரு மணி நேரமும் புதுப் புது வடிவம் எடுத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தில் இதுதான் பிரமாண்டமான சிலைக் கடத்தல் என்பதால் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
சிலை கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆழ்வார்பேட்டை தீனதயாளன் வீட்டில் சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று காலை முதல் மாலை ஆறு மணி வரைக்கும் சோதனையில் ஈடுபட்டனர். 100 சிலைகள் வரை தீனதயாளன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் 34 சிலைகள் வெண்கல சிலைகள் ஆகும். இதர சிலைகள் ஐம்பொன், செப்பு திருமேடுகள் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் ஆனது. இதில் சிலைகள் மட்டுமின்றி, சில வெண்கலப்பாத்திரங்களும் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் பழைமை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தொல்லியல் அறிஞர் நாகசாமி சம்பவ இடத்திற்கே வந்து ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாகசாமி, இங்குள்ள சிலைகள் எல்லாம் 1000 ஆண்டுகள் வரை பழைமை வாய்ந்தது. இதில் பெரும்பாலானவை சோழர் காலத்தை சேர்ந்தவையாகும். இந்த சிலைகளை எல்லாம் விலைகளுக்குள் அடக்கி விட முடியாது. அந்தளவிற்கு ஒவ்வொரு சிலையும் விலை மதிப்பற்றது. இதில் சிவபெருமான், அம்மன், நர்த்தனம் ஆடும் தெய்வங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிலைகள் உள்ளன.
இந்த மொத்த சிலைகளையும் ஒரே நாளில் ஆய்வு செய்து விட முடியாது. இவை எல்லாம் வெளிநாட்டுக்கு கடத்தப்படும் முன், இதை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது என்றும் கூறினார். வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்த, அந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த இரும்பு மற்றும் கற்களினால் ஆன சிலைகள் ஆகும்.
தீனதயாளன் வீட்டில் சோதனை இன்னும் முழுமையாக முடியவில்லை. இன்னும் ஒரு அறை பூட்டியே இருக்கிறது. ஆறு மணிக்கு மேல் சோதனையிடக்கூடாது என்பதால் போலீசார் இந்த சோதனையை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர். இன்று காலை மீண்டும் சோதனை நடக்க இருக்கிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் சிலைகளின் விவரங்களை முழுமையாக போலீசார் வெளியிடவில்லை.
இந்த சோதனை இன்றும் தொடர இருப்பதால், இன்றைக்கு மாலை தான் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்த மொத்த விவரமும் தெரிய வரும். கடந்த சில தினங்களில், சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகள் தீனதயாளன் விவகாரத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள மொத்த சிலைகளின் தோராய எண்ணிக்கை 155 ஆகும். இதன் மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும்.
இத்தனை பெரிய கடத்தலை தீனதயாளன் சாதாரண நெட்வொர்க்கை வைத்து அரங்கேற்றியிருக்க முடியாது. மிகப்பெரிய அரசியல் பின்புலமும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பும் இல்லாமல் தீனதயாளனால் கடந்த ஐம்பது வருடங்களாக இத்தனை பெரிய கடத்தலை அரங்கேற்ற சாத்தியமே இல்லை. அதனால், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருக்கும் அனைவர் மீதும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிலை கடத்தல் வழக்கில் ஒரு நடிகையின் பெயர் அடிபட்டு வரும் நிலையில், தீனதயாளனுக்கும், சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் கபூரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications