தமிழக தேர்தலில் போட்டியிட கலாம் பேரன் உள்பட 2,000க்கும் மேற்பட்ட பாஜகவினர் விருப்ப மனு தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜகவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாஜக அதீத முயற்சி செய்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாங்கு தாங்கு என தாங்கியது. ஆனால் விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இதையடுத்து பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட கடந்த 4, 5 ஆகிய இரண்டு தேதிகளில் விருப்ப மனுக்கள் அளித்தனர். இரண்டு நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டணி முடிவாகாத நிலையில் முதல் நாள் மட்டும் 1,300 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணை தலைவர் வானதி சீனிவாசன், ஹெச். ராஜா, கருப்பு முருகானந்தம், நரேந்திரன் ஆகியோர் பெயர்களில் பல்வேறு தொகுதிகளில் தொண்டர்கள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
தாம்பரத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினரான செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதியை சேர்ந்த கல்லடம்பாளையம் மணி, பீர்க்கன்கரணை சங்கரன், தாம்பரம் வர்ஷா ரமேஷ், ஷேக், காமராஜபுரம் சிவக்குமார், திருமலைநகர் செல்வி செல்வராஜ், மாடம்பாக்கம் லதா ரங்கராஜ், இரும்புலியூர் சுமதி சந்திரசேகர், வேதபுரீஸ்வர் கோவில் ஜெகநாதன் ஆகிய 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயரின் பேரன் ஷேக் சலீம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தமிழிசையிடம் விருப்ப மனு அளித்துள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications