வண்ண வாக்காளர் அடையாள அட்டைக்கு 1 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பம் - ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இதுவரையில் 1 லட்சம் வாக்காளர்கள் வண்ண வாக்காளர் அட்டை கேட்டு விண்ணப்பித்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளின் வெளியேயும் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகளில் வழங்கப்படும் பைகளில் மே 16 ஆம் தேதி வாக்குப்பதிவு தினம். மறக்காமல் வாக்களியுங்கள் என்ற வாசகம் ஜவுளிக் கடைக்காரர்களால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 25 ஆம் தேதி முதல் வருகிற 5 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 116 முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பின்னர் மத்திய நுண் பார்வையாளர்கள் தமிழகம் வருகிறார்கள்.
வாக்காளர் சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை கேட்டு இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 4 ஆயிரம் வண்ண அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதி அட்டைகளும் விரைவில் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications