For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயல்பாடு 'பவர் ஸ்டார்' மாதிரி இருந்தாலும்.. செல்லூரார் கில்லாடி.. தப்பு கணக்கு போடாதீங்க!

அமைச்சர் செல்லூர் ராஜூ ராஜதந்திரத்துடன் அரசியல் நகர்த்துகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செல்லூர் ராஜூவை தப்பு கணக்கு போடாதீங்க மக்களே !- வீடியோ

    சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூவை பற்றி பெரும்பாலான மக்கள் சரியாக கணிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

    அழகிரி-செல்லூர் ராஜூ சந்திப்பு நேற்று நடந்து முடிந்தது. இங்கு ஒன்றை நாம் கவனித்தே ஆக வேண்டும். அழகிரியும், செல்லூர்ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள், அதனால் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

    கையாளும் விதம்

    கையாளும் விதம்

    ஆனால், செல்லூர் ராஜு இதில் எந்த அளவுக்கு அரசியலை கையாண்டிருக்கிறார் என்ற விவரத்தை பெருமளவு தமிழக மக்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. எப்படி ரஜினியை அரசியலில் ஒரு அசால்ட் பேர்வழிமாதிரி பார்த்து ஏமாறுகிறார்களோ அதையேதான் செல்லூர் ராஜூ விஷயத்திலும் நடக்கிறது. செல்லூர் ராஜூவை கலாய்க்கும் பெரும்பாலானோர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

    லோடுமேன் செல்லூர் ராஜூ

    லோடுமேன் செல்லூர் ராஜூ

    என்.டி.டி.வி முதல் பிபிசி வரை என தேசிய, சர்வதேச ஊடகங்கள் வரை ஃபேமஸ் ஆகியிருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜு யார் தெரியுமா? அவர் ஒரு தமிழக அமைச்சர் என்பது அனைவரும் அறிந்ததுதான். மறைந்த மதுரை அதிமுக ஜாம்பவான் பழக்கடை பாண்டியன் கடையில் லோடுமேனாக வேலை பார்த்தவர்தான் ராஜு.

    [Read This: அழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன?]

    கடின உழைப்பு

    கடின உழைப்பு

    ஆனாலும் கடின உழைப்பால் கட்சியில் மேலே வந்துவிட்டார். கட்சிக்கு வந்து பதவியை பிடித்ததும் அவர் சொல்லிவரும் விஷயங்களான, தெர்மாகோல் விவகாரம் ஆகட்டும், ஜெயலலிதாவின் முதலாம் நினைவு தினத்தன்று அவரது உருவபொம்மையை படுக்க வைத்து நடத்திய ஊர்வலம் ஆட்டும் எல்லாமே பேசப்பட்டன.

    அதிகமாக பேசப்பட்டவர்

    அதிகமாக பேசப்பட்டவர்

    இதையெல்லாம் அறியாமல் பேசுவதாக மக்கள் நினைத்து கொண்டிருக்கலாம். ஆனால் அது தவறு. இது ஒரு அரசியல் தந்திரம். பிஎஸ்சி படித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, கன்னாபின்னாவென்று பேசினாலும், லாஜிக் இல்லாமல் பேசினாலும், அவரையும், தன் கட்சியையும் மக்களை கவனிக்கும் வண்ணம் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் என்பதே இதில் பொதிந்திருக்கும் உண்மை. அதிமுகவுக்கு என்று ஒரு தனி ஊடகம் இல்லை. நேற்றுமுன்தினம் தான் வந்திருக்கிறது. ஆனாலும் கடந்த 2 வருடங்களாக அனைத்து மீடியாக்களிலும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடுத்தபடியாக மக்களிடம் அதிகமாக பேசப்பட்ட அமைச்சர் யார் என்று பார்த்தால் செல்லூர்தான்.

    வெறுமனே மீம்ஸ்கள்

    வெறுமனே மீம்ஸ்கள்

    உளறலே ஆனாலும் எதையாவது பேசி மக்களிடம் தன் இருப்பையும், தன் பெயரையும், தன் ஆட்சியையும் நினைவுபடுத்தி கொண்டே வருவதுகூட ஒரு தந்திரம்தான். எப்படியாவது நாம் பேசப்பட்டு விட வேண்டும் என்று நினைத்து விடுகிறார். அதன்மூலம் வரும் பாதிப்புகளை பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதே கிடையாது. இதனை மக்கள்தான் புரிந்து கொள்ள முன்வரவேண்டும். வெறுமனே மீம்ஸ்களை போட்டுக்கொண்டு சந்தோஷப்பட்டு விடக்கூடாது.

    அமைச்சரின் யுக்தி

    அமைச்சரின் யுக்தி

    மீம்ஸ்களில் மாட்டிக் கொண்டு நெட்டிசன்களிடம் கலாய் வாங்கிய இதே செல்லூர்ராஜூதான் திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக ஓட்டை பிரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்பதை கவனியுங்கள். இப்படி ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் செயல் திராவிட கட்சிகளுக்கே உரிய தந்திரம்தான். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் இந்த யுக்தியானது, எதிரிகளை பலவீனப்படுத்துவது. இதைதான் அமைச்சர் செல்லூர்ராஜூ அழகிரி விஷயத்தில் செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் மக்கள் இனி உற்று நோக்க தொடங்க வேண்டும்.

    English summary
    Most of the People are less guessing about Minister Sellur Raju
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X