மனநலம் பாதிக்கப் பட்ட 18 வயது மகன்... கருணைக்கொலை செய்யக்கோரி தாய் மனு
சென்னை: மனநிலை பாதிக்கப் பட்ட தனது 18 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி தாயே காவல் நிலையத்தில் மனு அளித்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று நேற்று சென்னையில் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 13வது குருக்குத் தெருவைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(40)யின் மகன் ரோகித் (18). ரோகித்திற்கு மனநிலை பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கண்ணகி நகர் காவல்நிலையத்துக்குச் சென்ற பாக்கியலட்சுமி, மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-
என் மகன் ரோகித் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்தேன். ஆனால் அவனது மூர்க்கத்தனமான செயல்பாடு காரணமாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். கடந்த 6 மாதங்களாக நான் தான் அவனை பாதுகாத்து வருகிறேன்.
அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், பெண்களை அசிங்கமாக திட்டுவதாக கூறி அவனை அடித்து விடுகின்றனர். தினமும் யாரிடமாவது அடி வாங்கி வீட்டிற்கு வருகிறான். உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. திடீரென வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைக்கிறான். பொருட்களை அள்ளிப்போட்டு தீ வைத்து விடுகிறான்.
எப்போதும் அவனை அருகில் இருந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. வெளியே விட்டால் யாரையாவது அடித்து விடுகிறான். அவன்படும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. என்னாலும் அவனை கவனிக்க முடியவில்லை.
சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன். சகோதரி வீட்டில் தான் எனக்கு சாப்பாடு போடுகின்றனர். எனவே எனது மகன் ரோகித்தை கருணை கொலை செய்துவிடுங்கள்' என இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications