அடிக்கக் கூடாது.. குணமா சொல்லணும்.. இந்த ராசாத்தி சொல்றதை கேளுங்க!
தாய்-மகள் உரையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: எத்தனையோ வீடியோக்கள் இதுவரை வைரலாகி உள்ளன. ஆனால் இப்போது வந்துள்ள இந்த வீடியோ எல்லோரையுமே உற்றுநோக்க வைத்துள்ளது.
ஏதோ சேட்டை செய்ததற்காக தாயிடம் ஒரு சிறுமி அடிவாங்குகிறார். சிறுமியை அடித்துவிட்டு தாய்க்கு மனசு கேட்கவில்லை. அதனால் சிறுமியிடம் பேச துவங்குகிறார். அடிவாங்கிய சிறுமியோ, அதற்கு அழுதுகொண்டே பதிலும் சொல்கிறார்.

ஆனால் அந்த சிறுமி கூறியது பதில் என்று எடுத்துக் கொள்ள முடியாது. உணர்வுள்ள ஒவ்வொருவருக்கும் சாட்டையடி!! நெத்தியடி!!
தாய்: சேட்டை பண்றது தப்பா? தப்பில்லையா? பேச்ச மாத்தாம பதில் சொல்லு...
சிறுமி: தப்புத்தான்.. அதுக்கு என்ன சொல்லணும்?
தாய்: அதுக்குத்தான் அடிக்கிறது.. புரிஞ்சதா?
சிறுமி: அடிச்சா தப்பு..
தாய்: என்ன?
சிறுமி: மெதுவா குணமா வாய்ல சொல்லணும். திட்டாம.. அடிக்காம வாய்ல சொல்லணும்...
தாய்: அதுக்கு நீ சேட்டை பண்ணாம இருக்கணும்...
சிறுமி: சேட்டை பண்ணாலும் வாய்ல குணமா சொல்லணும்...
தாய்: இப்ப எதுக்கு நீ இப்படி அழுதுகிட்டு இருக்கிற?
சிறுமி: அடிச்சா... அழுகாம என்ன செய்வாங்க? அப்பறம் நீயே சொல்லு..
தாய்: சேட்டை பண்ணா அடிக்காம என்ன பண்ணுவாங்க.. நீ சொல்லேன்...
சிறுமி: குணமா வாய்ல சொல்லணும்....
இப்படிப்பட்ட உரையாடல்கள் அந்த வீடியோவில் உள்ளது. அம்மா அடித்த வலி பொறுக்க முடியாமல் அவள் அழுது கொண்டே பேசினாலும், அதில் மழலை தெறிக்கிறது. ஆனால் எவ்வளவு பெரிய விஷயத்தை இந்த சமுதாயத்துக்கு சிறுமி உணர்த்தியிருக்கிறாள்!! எவ்வளவு பெரிய தவறுகளை தன் பேச்சினால் சாடியிருக்கிறாள்!! அடியாத மாடு படியாது, அடி உதவுற மாதிரி அண்ணன்-தம்பி உதவ மாட்டாங்க... இதெல்லாத்தையும் தூக்கி நொறுக்கி எறிந்திருக்கிறாள் இந்த சிறுமி!!
எத்தனையோ பெற்றோர் வயதாகியும் பொறுப்பில்லாமல், சிந்தனை ஓட்டமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களைவிட இந்த சிறுமி எவ்வளவோ உயர்ந்து நின்றுவிட்டாள். சின்ன தப்பு செய்தாலும் அதற்காக கையை ஓங்கி வரும் பெற்றோர்களுக்கு எல்லாம் பாடம் புகட்டியிருக்கிறாள்.
எதுக்கெடுத்தாலும் அடிக்கக்கூடாது என்பதையும், அதனால் பிஞ்சு உடம்பு வலி தாங்கவில்லை என்பதுடன், தப்பு செய்தால் அடிப்பது முறையான செயல் ஆகாது என்பதையும் சமுதாயத்துக்கு சொல்லி இருக்கிறாள் இந்த சிறுமி!! இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருவதுடன், ஏராளமான லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications