நாமக்கல் அருகே சோகம்... டெங்கு பாதித்த 6 மாத குழந்தையுடன் தாய் தற்கொலை!

நாமக்கல் அருகே 6 மாத குழந்தைக்கு டெங்கு அறிகுறிகள் தெரிந்ததையடுத்து 6 மாத குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : நாமக்கல் அருகே 6 மாத குழந்தைக்கு டெங்கு அறிகுறி தென்பட்டதையடுத்து குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலுக்குறிச்சியைச் சேர்ந்த அன்புகொடி என்பவருக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 6 மாத குழந்தையான ஹர்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் காட்டியுள்ளார் அன்புகொடி. இதில் குழந்தைக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 Mother jumped off into the well near Namakkal with her 6 months old baby as the baby has affected by Dengue

இதனால் மனமுடைந்த கூலித்தொழிலாளியான அன்புகொடி 6 மாத குழந்தையுடன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு ராசிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தைக்கு டெங்கு நோய் இருப்பதை அறிந்ததும் மனம் நொந்து அன்புகொடி தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+