எம்எஸ்வி உடல்நிலையில் முன்னேற்றம்.. ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்! - மகன் பேட்டி
சென்னை: இன்னும் ஒரு வாரத்தில் அப்பா நலமுடன் வீடு திரும்புவார் என அவரது மகன் கோபி தெரிவித்தார்.
மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சில நாட்களுக்கு முன்பு திடீர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவர், சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சைக்குப்பின், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உடல் நலம் விசாரித்ததுடன், அவருக்கு தன் கையால் சாப்பாடு ஊட்டியும் விட்டார்.
பி வாசு, சிவகுமார் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர்.
எம்எஸ்வியை உடனிருந்து கவனித்து வரும் அவரது மகன் கோபி இதுகுறித்து கூறுகையில், "அப்பாவின் உடல் நிலை குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி. அப்பாவின் உடல்நிலையில், இப்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு 88 வயது நடக்கிறது. பார்வையாளர்களைத் தவிர்க்கவும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில், சிகிச்சை முடிந்து அப்பா வீடு திரும்புவார்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications