Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவரை எவர் வெல்லுவாரோ....?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெல்லிசை மன்னர் என்பது இவருக்கு மிகச் சாதாரண பட்டம்தான். மெல்லிசையின் அசைக்க முடியாத சக்கரவர்த்தி எம்.எஸ்.வி என்றால் அது கூட சாதாரணம்தான். இவரது இசையில் மயங்காத உள்ளம் இல்லை, உருகாத உள்ளம் இல்லை.. அழாத கண்கள் இல்லை..!

எம்.எஸ்.வியின் இசைப் பயணத்தில் எந்தவிதமான ஸ்பீட் பிரேக்கரும் இல்லாமல் அத்தனை இசை ரசிகர்களையும் எப்போதும் சந்தோஷத்தில் மிதக்க வைத்தவர்.

எந்த வகை இசையாக இருந்தாலும் எம்.எஸ்.வியின் இசைக் கையில் பட்டுத் தெறித்தபோது உள்ளங்கள் மெல்ட் ஆகத் தவறியதில்லை.

சாகாவரம் படைத்த எத்தனையோ பாடல்களையும், இசையையும் கொடுத்த எம்.எஸ்.விக்கு இந்தப் பாட்டு மிகப் பொருத்தமானதாக அமையும்.. இந்தப் பாடலை பாடியதும் அவரே.. படம் பயணம்.

பயணம் பயணம் பயணம்
பத்து மாத சித்திரமொன்று ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்
பின்பு அடுத்தது ஆசையின் பயணம்
இளம் காதலர் கண்களில் பயணம்
அந்த கலக்கத்தில் கண்ணீரில் பயணம்

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
எவரை எவர் வெல்லுவாரோ

புகை வண்டி ஓட்டிட ஒருவன்
அது போகின்ற வழி சொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்
அவன் இடையினில் நினைப்பவன் இறைவன்

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
எவரை எவர் வெல்லுவாரோ

சந்திப்பு வருவது கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
அவர் சொந்தங்களாவதும் உண்டு
அது தொடர் கதை ஆவதும் உண்டு

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
எவரை எவர் வெல்லுவாரோ

எம்.எஸ்.வியின் வாழ்க்கைப் பயணம் முடிந்து போயிருக்கலாம்.. ஆனால் அவரது இசையின் பயணம்.. முடிவே இல்லாமல் உலகம் உள்ளவரை கூடவே வரும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+