நாற்றமெடுத்த கழிவறைகள்... வெகுண்டெழுந்த மும்பை நாகர்கோவில் ரயில் பயணிகள் - வீடியோ
மும்பை நாகர்கோவிலெக்ஸ்பிரஸ் ரயிலில்பயணிகள்போதிய தண்னீர் இல்லாத காரணத்தாலும் கழிப்பறைகள்சுத்தம் செய்யப்படாத காரணத்தாலும் ஈரோடு ரயில்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமலும் போதிய தண்ணீர் வசதி இல்லாததைக் கண்டித்தும் ஈரோட்டில் ரயிலை நிறுத்தி பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்தது. மும்பையிலிருந்து ரயில் புறப்பட்ட சில மணிநேரங்களில் ரயிலில் தண்ணீர் வரவில்லை. இதனால் கழிப்பறைகள் மிகவும் அசுத்தமடைந்தன.

ரயில் பயணிகள் பலமுறை இதுகுறித்து டிடிஆரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தண்ணீர் இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் ரயில் பெட்டிகளில் அசுத்தமான வாடை வீச ஆரம்பித்துவிட்டது.
இதைப் பொறுத்துக்கொள்ள இயலாத பயணிகள், ஈரோட்டில் ரயில் வந்த போது, அவசரச் சங்கிலியைப்பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, அனைத்துப்பயணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் சில மணிநேரம் அங்கு நின்றது.
பயணிகளின் போராட்டத்தைக் கண்ட ரயில்வே அதிகாரிகள் உடனடியாக கழிப்பறைகளை சுத்தம் செய்து, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பினர். அதனையடுத்து ரயில் அங்கிருந்து கிளம்பி நாகர்கோவில் நோக்கிச் சென்றது.
ரயில்பெட்டிகளில் தண்ணீர் நிரப்புதல்,கழிவறை சுத்தம் செய்தல் ஆகிய வேலைகளுக்கான கான்ட்ராக்ட் முடிந்துவிட்டதால் புதிய கான்ட்ராக்டுகளை ரயில்வே நிர்வாகம் நியமிக்காததே இந்த பிரச்சனைக்குக் காரணம் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications