ராணிப்பேட்டை எம்எல்ஏ அலுவலகம் எதிரே தீக்குளித்த துப்புரவு ஊழியர் மரணம்!
மீண்டும் பணி வழங்க கோரி தீக்குளித்த துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.
வேலூர்: பணி வழங்காததை கண்டித்து தீக்குளித்த, ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு ஊழியர் ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு ஊழியராக பணி புரிந்து வந்தவர் ஆனந்தன். இவருக்கும், துப்புரவு ஆய்வாளர் முருகன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆனந்தன் தன்னை தாக்கியதாக, நகராட்சி ஆணையாளரிடம் முருகன் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், ஆனந்தன் கடந்த மாதம் 4ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் ஒருமாதமாகியும் தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாததால் மிகுந்த வேதனை அடைந்தார். எனவே பணியில் மீண்டும் நகராட்சி பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முருகன் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே நேற்று மாலை தீக்குளித்தார்.
இதில் 90 சதவீதம் தீக்காயமடைந்த ஆனந்தன் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆனந்தன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications