அப்பா என்று அழைக்கவா... கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய முதல் குழந்தை' முரசொலி!
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அவர் உருவாக்கிய முரசொலி அஞ்சலி செலுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அவருடைய மற்றொரு பிள்ளையான முரசொலி கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்துள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட திமுக தலைவர் கருணாநிதி நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தேர்ந்த அரசியல் தலைவர், கட்சித் தலைவர், சிறந்த நிர்வாகி என்று பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி, மிகச் சிறந்த பத்திரிகையாளரும்கூட.

1942 ஆகஸ்ட் 10ம் தேதி முரசொலி பத்திரிகையை துவக்கினார் கருணாநிதி. எவ்வளவு கட்சிப் பணிகள், அரசுப் பணிகள் இருந்தபோதும், முரசொலியில் கருணாநிதியின் பங்கு இல்லாமல் இருக்காது. உடன்பிறப்புகளுக்கான கடிதம் முதல் முரசொலியில் அவருடைய கைவண்ணம் எப்போதும் வியாபித்திருக்கும்.
முரசொலியை தன்னுடைய முதல் பிள்ளை என்று கருணாநிதி பலமுறை கூறியுள்ளார். இன்று அவருடைய உடலுக்கு அருகில், இன்றைய முரசொலி பத்திரிகை வைக்கப்பட்டிருந்தது அதற்கு அத்தாட்சியாகும்.

இன்றைய முரசொலியின் முதல் பக்கத்தில், திராவிட இயக்க வைரத்தூண் - ஓய்வறியைப் போராளி - தலைவர் கலைஞர் மறைந்தார் - தமிழினமே கண்ணீர்க் கடலில் மிதக்கிறது என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
அதே பக்கத்தின் கீழே, ஒரே ஒரு முறை இப்போதாவது, அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் உருக்கமான கண்ணீர் கடிதம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கடிதத்தையும் முதல் பக்கத்தில் வெளியிட்டு, பாசமிகு தந்தைக்கு ஸ்டாலினும் இணைந்து முரசொலியும் அஞ்சலி செலுத்தியுள்ளது.

வரும் 10ம் தேதி 77வது ஆண்டை முரசொலி நிறைவு செய்ய உள்ள நிலையில், அதை உருவாக்கிய பாசமிகு தந்தை கருணாநிதி உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவு முரசொலிக்கு மட்டுமல்ல பத்திரிகை உலகுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். ஒவ்வொரு நாளும் பத்திரிகையை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வருவது என்பது ஒரு பிரசவத்துக்கு ஈடானது என்பது பத்திரிகையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபடும் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளனின் மன உணர்வாகும். அந்த உணர்வை, கடந்த 76 ஆண்டுகளாக சுமந்துள்ளார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications