கொலை, கொள்ளைகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு முதலிடம்: ஸ்டாலின் வேதனை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களாக நெல்லையும், தூத்துக்குடியும் விளங்குகின்றன என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

நமக்கு நாமே என்ற பெயரிலான பிரச்சார பயணத்தின்போது, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளத்தூர் என்ற சிற்றூருக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியது:

சென்னையில் உள்ள கொளத்தூரில் நான் எம்எல்ஏவாக இருக்கிறேன். அந்த வகையில் குளத்தூர் நம்ம ஊர். கொளத்தூரில் செய்யும் அனைத்து பணிகளையும் இங்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

Murder and dacoity incidents are in the high at Nellai and Tuticorin districts: Stalin

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்னிடம் ஓரு மனு அளித்துள்ளார். அதில், இந்த பகுதியில் ஒரு லட்சம் பனை மரங்கள் அமைந்துள்ளன. அந்த பகுதியில் கானம், பயிறு உள்ளிட்டவற்றை பயிர் செய்த வருகிறோம். இந்த பனை மரங்களை அழிக்கும் வகையில் சிப்காட் கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார். நான் இந்த ஒரு லட்சம் மனை மரங்களை மீட்க ஆதரவாக இருப்பேன்.

தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளைகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. இது வேதனையாக உள்ளது. இதனை மூடி மறைத்து சட்டசபையில் ஜெயலலிதா பொய்யான அறிக்கையை வெளியிடுகிறார். தமிழகத்தை காப்பாற்ற உங்களால் தான் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+