திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருட்டு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருடுபோனது தொடர்பாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெண்கலத்தாலான தண்டாயுதபாணி சிலையும் சூலமும் திருட்டு போயுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்திபெற்றது. இந்த கோயில் இருப்பு அறையில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த பல சிலைகளும் கோயில் சிலைகளும் உள்ளது. அண்மையில், அண்ணாமலையார் கோயிலுக்கு புதிதாக வந்த இணை ஆணையர், கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பட்டியலை பரிசோதனை செய்துள்ளார். அப்போது கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பித்தளையால் ஆன தண்டாயுதபாணி சிலையும் ஒரு பித்தளை சூலமும் இருப்பு அறையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காணாமல் போயுள்ள தண்டாயுதபாணி என்கிற முருகன் சிலை 1957 ஆம் ஆண்டு ஒரு பக்தர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அதே போல, காணாமல் போன சூலம் 1982 ஆம் ஆண்டு ஒரு பக்தரால் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில், தண்டாயுதபாணி சிலை மற்றும் சூலம் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்த இணை ஆணையர் ஞானசேகர் இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. பொன்னியிடம் கோயில் இருப்பு அறையில் இருந்து சிலைகள் திருடப்பட்டு இருப்பதை புகாராக அளித்தார். புகாரில் தண்டாயுதபாணி சிலை பித்தளை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கோயிலில் உள்ள ஒரு சிலர் அதை வெங்கல சிலை என்று கூறுகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிலை திருடு போயிருப்பது குறித்த புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. இந்த வழக்கை திருவண்ணாமலை டவுன் போலீஸ் விசாரிப்பதா? அல்லது குற்றப்பிரிவு போலீஸ் விசாரிப்பதா? அல்லது சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதா என்று ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications