Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமா.. மாப்ளே! உடலும் மனசும் குளிருதே -தென்காசி திருவிழாவில் இந்துக்களின் தாகம் தீர்த்த முஸ்லிம்கள்

இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான் என்று உறவு முறை வைத்து அழைத்துக் கொள்ளும் அளவும் நூற்றாண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவுக்கு வருகை தந்த ஏராளமான இந்து பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து தாகம் தீர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் மத அடிப்படையிலான வெறுப்பு பேச்சுக்கள், மத மோதல்கள், வன்முறைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், மாட்டுக்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப்படும் குற்றங்கள், கும்பல் தாக்குதல்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன.

வட இந்தியாவில் இருந்து தென் மாநிலமான கர்நாடகா வரை இத்தகைய மதவாத வன்முறைகள் தலைவிரித்து ஆட தொடங்கிவிட்டன. இந்த நிலையிலும், தமிழ்நாடு தனித்து நின்று மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது.

தமிழ்நாடும் மத ஒற்றுமையும்

தமிழ்நாடும் மத ஒற்றுமையும்

பல உதாரணங்களை இங்கு எடுத்துக் காட்டாக கூறலாம். ஆங்காங்கே ஏற்க முடியாத சில நிகழ்வுகள் நடந்தாலும் எங்கள் ஒற்றுமையை தகர்க்க முடியாது என்று தமிழர்கள் இந்தியாவுக்கே பாடமெடுத்து காட்டி விடுகிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மதநல்லிணக்கம் என்பது மற்ற பகுதிகளைவிட அதிகம் எனலாம்.

இந்து முஸ்லிம் ஒற்றுமை

இந்து முஸ்லிம் ஒற்றுமை

இங்குள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான் என்று உறவு முறை வைத்து அழைத்துக் கொள்ளும் அளவும் நூற்றாண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறார்கள். கோயில் திருவிழாக்களின் சமயத்தில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மசூதி, ஜமாத் நிகழ்வுகளில் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்து முக்கியத்துவம் கொடுப்பதும் வாடிக்கை.

தென்காசியில் மதநல்லிணக்கம்

தென்காசியில் மதநல்லிணக்கம்

அவரவருக்கு விருப்பமான மதங்களை இந்துக்களும், முஸ்லிம்களும் பின்பற்றினாலும், அதை கொண்டு தங்களுக்குள் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில்தான் இவர்களின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் சம்பவம் தென்காசியில் நடைபெற்று இருக்கிறது.

காசி விஸ்வநாதர் கோயில் திருவிழா

காசி விஸ்வநாதர் கோயில் திருவிழா

தற்போது தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்கு தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருக்கிறார்கள். அதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தந்துள்ளனர்.

தண்ணீர் கொடுத்த முஸ்லிம்கள்

தண்ணீர் கொடுத்த முஸ்லிம்கள்

தமிழ்நாட்டில் இப்போதே வெயில் கடுமையாக இருப்பதால் அங்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் இந்துக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தாகத்தை தீர்க்க இலவசமாக தண்ணீர் பாட்டிகளை விநியோகம் செய்து வருகிறார்கள். சமூக ஆர்வலர் நாகூர் மீரான் தலைமையிலான இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

பக்தர்கள் நெகிழ்ச்சி

பக்தர்கள் நெகிழ்ச்சி

இதனை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நெகிழ்ச்சியோடு வாங்கினார்கள். அவர்களில் சிலரும் அங்கு வந்த ரஷிய சுற்றுலா பயணிகளும் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்த இஸ்லாமியர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளாவில் பகிரப்பட்டு வருகிறது.

கோவை திருவிழா

கோவை திருவிழா

இதேபோல் அண்மையில் கோவையில் நடைபெற்ற கோயில் திருவிழாவிலும் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு இலவசமாக தண்ணீர் பாட்டில்களை வழங்கி தாகம் தீர்த்தார்கள். அதேபோல் நெல்லை ஏர்வாடியில் கடந்த ஆண்டு திருவழுதீஸ்வரர் ஆலய அழகுத்தேர் வெள்ளோட்டத்தின்போது 40 ஆண்டுகளாக நகராமல் இருந்த தேரின் வடத்தை இந்துக்களுடன் சேர்ந்து அப்பகுதி இஸ்லாமியர்களும் இழுத்தது தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக அமைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+