நீங்க, தொலைந்த சனியனுடன் கூட்டு சேர்ந்தவர்.. இளங்கோவனுக்கு முத்தரசன் அட்டாக் பதில்!
சென்னை: எங்கள் கூட்டணியில் யாராவது ஒருவர் மரணமடையவேண்டும் என்று இளங்கோவன் விரும்புகிறார். தொலைந்த சனியனுடன் கூட்டணி வைத்திருக்கும் இளங்கோவனுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

சமீபத்தில் மக்கள் நலக் கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அந்த கூட்டணியில் 6 பேர் இருக்கின்றார்கள். 6 பேர் என்றால், 4 பேர் தூக்குவதற்கு. ஒருவர் அதில் படுத்துக் கொள்வதற்கு. இன்னொருவர் அதில் சங்கு ஊதுவதற்கு. அதுதான் 6 பேர் கொண்ட கூட்டணி என்று கூறினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த கருத்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை பெரிதும் கொதிப்படையவைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன், சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சனியன் தொலைந்தது என்று கூறும் அளவிற்கு நாகரீகமாக பேசக்கூடியவர்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்கள் நலக்கூட்டணியில் யாராவது ஒருவர் மரணமடைய வேண்டும் என்று இளங்கோவன் விரும்புகிறாரா? என்ற கேட்டார்.
சனியன் தொலைந்தது என்ற இளங்கோவனுக்கு கூடா நட்பு கேடாய் முடியும் என்று பதிலளித்தவர் கருணாநிதி. இன்றைக்கு தொலைந்த சனியனும் கேடாய் நட்பளிக்கக் கூடியவர்களும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். இருவருமே ஊழல் கட்சிகள்தான். இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று முத்தரசன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications