திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட மறுத்த முத்தரசன்?
சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் போட்டியிட மறுத்ததாகவும் இதனால் அக்கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கும் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் திருவாரூர் தொகுதியில் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் தாம் போட்டியிட தயார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் கூறியிருந்தார். தற்போது முத்தரசன் தேர்தலில் போட்டியிட மறுத்ததாகவும் இதனால் கட்சிக்குள் அவர் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முத்தரசனுக்கு நெருக்கடி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது கருணாநிதி; ஆகையால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்தான் அங்கு போட்டியிடவேண்டும் என விவாதிக்கப்பட்டது. மேலும் பெரும்பான்மையோர் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

போட்டியிட மறுப்பு
ஆனால் முத்தரசனோ திருவாரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை. எனது பெயர் கட்சியின் நிர்வாக கமிட்டியின் பரிசீலனையில் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இது அக்கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தா.பா. ஆவேசம்
அத்துடன், ஒரு மாநில செயலாளரே முக்கியமான தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை என சொல்லுவது சரியானது அல்ல. இந்த மக்கள் நலக்கூட்டணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை ஏற்கவில்லை என்று கொந்தளித்தாராம் மூத்த தலைவர் தா.பாண்டியன்.

கருணாநிதிக்கு எதிராக மாசிலாமணி
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணி பொறுப்பாளரான மாசிலாமணியை திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கேற்ப இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலிலும் திருவாரூரில் மாசிலாமணிதான் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications