என்னை நிர்வாணமாக பூஜை செய்யுமாறு வற்புறுத்துகிறார்: பேராசிரியர் மீது மனைவி புகார்
தர்மபுரி: மருத்துவக் கல்லூரியின் தலைவர் பதவியை பெற தனது கணவர் நிர்வாண பூஜை செய்வதுடன் தன்னையும் அவ்வாறு பூஜை செய்ய வற்புறுத்துவதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகில் இருக்கும் பாரதிபுரம் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் டாக்டர் செல்வராஜ்(50). தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவரது மனைவி கல்பனா இறந்த பிறகு அவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள எல்லத்தூரைச் சேர்ந்த கார்த்திகா(28) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திகாவின் கணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார். அதன் பிறகே அவர் செல்வராஜை மணந்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி ஓராண்டு வரை கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. செல்வராஜ் ஏதோ பூஜை செய்வதாகக் கூறி அவ்வபோது வெளியே சென்று வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டிலேயே ஒரு நாற்காலியில் நிர்வாணமாக அமர்ந்து கொண்டு பூஜை செய்து வந்துள்ளார்.
இதற்கு கார்த்திகா எதிர்ப்பு தெரிவித்தும் அவர் கேட்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல அவர் கார்த்திகாவையும் நிர்வாணமாக பூஜை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு கார்த்திகா மறுக்கவே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு ஏற்பட்டால் கார்த்திகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவார். அப்படி சென்றபோது செல்வராஜ் விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீஸை பார்த்த கார்த்திகா தனது தாய் மற்றும் பாட்டியுடன் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது செல்வராஜ் நிர்வாண பூஜையில் இருந்துள்ளார். அவரிடம் கார்த்திகா இந்த நிர்வாண பூஜையை விட்டுவிட்டால் நாம் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார். ஆனால் செல்வராஜோ, நீயும் நிர்வாண பூஜை செய்தால் சேர்ந்து வாழலாம் இல்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவிவித்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் செல்வராஜ் தனது மனைவியை அடித்து நொறுக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திகா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறுயிருப்பதாவது,
என் கணவர் கல்லூரியின் தலைவர் பதவியை பெற நிர்வாண பூஜை செய்கிறார். அவருடன் சேர்ந்து என்னையும் நிர்வாணமாக பூஜை செய்யுமாறு கூறுகிறார் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications