'இனி என் எஞ்சிய வாழ்வு உங்களுக்காக...' முழங்கிய கமல்ஹாசன்.. ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்
'இனி என் எஞ்சிய வாழ்வு உங்களுக்காக...' என்று மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய கமலஹாசன் குறிப்பிட்டார்.
Recommended Video

மதுரை : இதுவரை ஒரு நடிகனாக நல்ல வீடு, கார் என சொகுசான வாழ்க்கை கொடுத்துவிட்டீர்கள். அதற்கு இதுவரை நான் இதுவரை எதுவும் செய்ததில்லை ஆனால், இனிமேல் என் எஞ்சிய வாழ்நாள் உங்களுக்காக என்று கமலஹாசன் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற தனது கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்திப் பேசினார் கமலஹாசன். இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் கொடி ஏற்றிய கமலஹாசன், பின் தனது மக்கள் நீதி மய்யக் கட்சியின் பெயரை அறிவித்த பின்பு மாவட்டப் பொறுப்பாளர்களைப் அறிவித்துப் பேசினார். அதன்பிறகு கொள்கைகள் குறித்துப் பேசும்போது, இதுவரை நான் நடிகனாக இருந்தவரை எனக்கு நீங்கள் சம்பளமாகப் பணம் கொடுத்து உள்ளீர்கள்.
நீங்கள் கொடுத்த சம்பளத்தில் நான் வீடு, கார் என சொகுசாக வாழ்ந்துவிட்டேன். ஆனால், உங்களுக்காக களத்தில் இதுவரை எதுவுமே செய்தது இல்லை என்கிற குற்ற உணர்வு என்னை வாட்டியது.
அதனால் தான் இப்போது உங்களோடு கரம் கோர்த்துள்ளேன். இனிமேல் எஞ்சிய என் வாழ்நாள் உங்களுக்காகவே என்று கூறி மக்களை நோக்கி கை நீட்டி ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்ட கமலஹாசனுக்கு, மக்கள் தங்கள் கரகோஷத்தின் மூலம் பதிலளித்தனர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா












Click it and Unblock the Notifications