திண்டுக்கல் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்
ஒட்டன் சத்திரம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் என்ன? என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி பஞ்சாயத்து களத்துக்காட்டு தோட்டத்தில் சமீபத்தில் விழுந்த மர்ம பொருள் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்ப பயன்படும் ஒரு பாகமாகும் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் வானில் இருந்து ஒரு மர்ம பொருள் விழுந்தது. பலத்த சத்தத்துடன் விழுந்த அந்த மர்ம பொருள் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அந்த பொருள் எதில் இருந்து விழுந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், அது வெடிபொருள் இல்லை என்பதை உடனடியாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனால் விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து விமான பாதுகாப்புத்துறை மற்றும் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரகளை மாவட்ட நிர்வாகம் தொடர்புகொண்டது. மர்ம பொருளின் புகைப்படமும் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆய்வு செய்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பொருள் விமானத்தின் பாகம் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர்.
இதனால் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் விண்வெளியில் இருந்து விழுந்ததா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ஆனால், இதுவரை அந்த பொருள் என்னவென்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அந்த பொருள் என்னவென்பதை அறிவதற்கான ஆர்வமும் பொதுமக்களிடம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போது, அந்த பொருள் ஒட்டன்சத்திரம் தாசில்தாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பல துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
இந்த மர்ம பொருள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலைப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் வெங்கட்ராம், பொங்கியணன், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து அந்த பொருளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் இறுதியில் அவர்கள் கூறியதாவது:-
இந்த பொருளானது, வானில் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்ப பயன்படும் ஒரு பாகமாகும். ஆனால், இந்திய விஞ்ஞானிகள் வட்டவடிவமான பொருளை மட்டுமே பயன்படுத்துவார்கள்.
இந்த பொருள் உருளை வடிவத்தில் இருப்பதால் இது வெளிநாட்டு ராக்கெட்டில் பயன்படுத்துவதாக இருக்கலாம்.மேலும், ராக்கெட்டின் பாகங்கள் வளிமண்டத்தில் நுழையும்போது அங்கேயே எரிந்து சாம்பலாகி விடும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications