எங்களது தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு பேசுங்கள் : முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி பதிலடி
சீமான் மீதான முதல்வரின் விமர்சனத்திற்கு தங்களின் தேர்தல் செயற்பாட்டு அறிக்கையை படித்து விட்டு விமர்சியுங்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
சென்னை : சீமானுக்கு போராட மட்டும்தான் தெரியும். பிரச்னைகளுக்கான தீர்வு சொல்லத் தெரியாது என்று விமர்சித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தங்கள் தேர்தல் செயற்பாட்டு வரைவு அறிக்கையைப் படித்துவிட்டு பேசுமாறு நாம் தமிழர் கட்சியினர் சவால் விடுத்துள்ளனர்.
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருவதாகவும், அது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து இருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதில் சொன்ன தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சீமானுக்குப் போராட மட்டுமே தெரியும். ஆனால், பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லத் தெரியாது என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
நாம் தமிழர் கட்சி கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது வெளியிட்ட ' நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு' புத்தகத்தை ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள் மாண்புமிகு முதல்வரே! @CMOTamilNadu
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 19, 2018
வரைவு படிக்க: https://t.co/ZzJUmzfz68#EdappadiPalanisamy | #Seeman pic.twitter.com/KIPQbZ7pbE
முதல்வரின் இந்தக் கருத்துக்கு, ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர். அதில், கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் செயற்பாட்டு வரைவு அறிக்கையை படித்துவிட்டு கருத்து கூறுங்கள் முதல்வரே ! என்று பதிவிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications