"நாட்டுக்கோழி" வாங்க கறிகடைக்கு போன நபர்.. அங்கே பார்த்தால் சேலம் பேன்ஸி ஸ்டோருக்குள்ளயே "அந்த" சீன்
சேலம்: ஆசை ஆசையாக நாட்டுக்கோழி வாங்க கடைக்கு போனவருக்கு, காத்திருந்தது பெரிய அதிர்ச்சி.. மொத்தம் 3 பேர் கைதாகி ஜெயிலில் உள்ளார்கள்.. என்ன நடந்தது?
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை.. 40 வயதாகிறது.. இவர் இதே பகுதிகளில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இவரது கடைக்கு, ஒருநபர் கறி வாங்க வந்துள்ளார். தன்னிடமிருந்த ரூ.200 ரூபாய் நோட்டுக்கள் 3 தந்து, கறி வாங்கினார்.

கோழிக்கறி: அந்த ரூபாய் நோட்டுக்களை வாங்கி பார்த்ததுமே, அது கள்ள நோட்டு அண்ணாதுரை தெரிந்து கொண்டார்.. பிறகு, கத்தி கூச்சல் போடவும், அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், ஓடிவந்து அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக போலீசாருக்கும் தகவல் தந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அந்த நபர் பெயர் உபைஸ் அலி என்தும், கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 24 வயதாகிறதாம்.. சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்துவருகிறாராம். இதையடுத்து, அந்த பேன்ஸி ஸ்டோருக்குள் அதிரடியாக போலீசார் நுழைந்து சோதனையை மேற்கொண்டனர்.
அப்போதுதான், அந்த கடைக்குள்ளேயே, கள்ள நோட்டு பிரிண்ட் ஆவது தெரியவந்தது. இதற்காகவே ஒரு தனி ரகசிய அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ளநோட்டுகள் அச்சிட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பேன்ஸி ஸ்டோர்: இந்த பேன்ஸி ஸ்டோரில் நீண்ட காலமாகவே இப்படி கள்ள நோட்டு அச்சடித்து வருகிறார்களாம்.. அந்த கடை ஓனர் காஜாமைதீனுக்கு 40 வயதாகிறது.. மேட்டூரிலேயே மொத்தம் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். திடீரென, அந்த கடைகளில் இருந்து பெருத்த லாபம் வரவில்லை.. கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கடனும் ஏற்பட்டுவிட்டது. இந்த கடனை எப்படி அடைப்பது என்று காஜாமைதீன் திணறி வரும்போதுதான், இப்படி ஒரு ஐடியா வந்துள்ளது.

இதற்காகவே, தன்னுடைய சொந்தக்காரர்கள் அப்துல் அகீம், உபைஸ் அலி போன்றோரை வரவழைத்து இந்த கள்ள நோட்டு வேலையில் ஈடுபடுத்தியிருக்கிறார். 3 பேரும் சேர்ந்தே கலர் பிரிண்டரை வாங்கி, அதில் 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.. அதாவது, செல்போன் ஆப் மூலமாகவே, டம்மி எடுத்து, அதை மேட்டூர் முழுவதும் புழக்கத்திலும் விட்டுள்ளனர்.
தொடர் விசாரணை: அப்படி காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து, நாட்டுக்கோழி வாங்கி வர சொன்னாராம்.. அப்போதுதான் சிக்கி உள்ளார்..
இப்போது ஓனர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுக்களை இவர்கள் புழக்கத்தில் விட்டுள்ளனர் என்று தெரியவில்லை. அதையும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
