மோசமான சாப்பாடு... ஆதி திராவிட விடுதி மாணவிகள் போராட்டத்தால் பரபரப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே அகஸ்தீஸ்வரத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் 80 பேர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காலை இந்த மாணவிகள் அனைவரும் திடீரென விடுதி முன்பு திரண்டனர். அவர்களின் கைகளில் காலையில் அவர்களுக்கு விடுதியில் வழங்கப்பட்ட உணவு இருந்தது.
அதனை விடுதி வாயில் முன்பு வைத்து அவர்கள் விடுதி நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் மற்றும் கோவளம் கிராம நிர்வாக அதிகாரிகளான லோகன்ராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே விவேகானந்தா கல்லூரி முதல்வரும், விடுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் விடுதியில் தங்களுக்கு தரமான உணவு வழங்குவதில்லை என்றும், விடுதி காப்பாளர் பகல் நேரத்தில் விடுதியில் இருப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.
தரமான உணவு வழங்கக் கேட்டு பலமுறை முறையிட்டும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று காலை வழங்கப்பட்ட உணவும் மிகவும் மோசமாக இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று காட்டமாக தெரிவித்தனர்.
இந்த போராட்டம் பற்றிய தகவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் சுப்பிரமணியன் விரைந்து வந்தார்.
அவரிடம் அப்பகுதி மக்கள் விடுதி காப்பாளர் மற்றும் நிர்வாகிகள் மீது சரமாரி புகார் கூறினர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் கலைந்து சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications