இந்திரா காந்தி விருது பெற நடிகை மீனாவுக்கு என்ன தகுதி இருக்கு.. கொந்தளிப்பில் நடிகை நக்மா!
தமிழக காங்கிரஸ் கட்சியின் மகளிர் தின விழாவில் இந்திரா காந்தி பெயரில் நடிகை மீனாவுக்கு விருது வழங்குவதை ஏற்க முடியாமல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் பொதுச்செயலர் நக்மா விழாவை புறக்கணித்துள்ளார்.
சென்னை: மகளிர் தின விழாவில் இந்திரா காந்தி பெயரிலான விருது வழங்க காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தேசிய பொதுச்செயலர் நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்து விழாவையே புறக்கணித்திருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் மார்ச் 11ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவை கொண்டாடுவதில் மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணிக்கும், முன்னாள் எம்.எல்.ஏ.யசோதாவுக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இரண்டு அணிகளாக பிரிந்து நின்றே மகளிர் தின கொண்டாட்டங்களை இருவரும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜான்சிராணிக்கு போட்டியாக தான் நடத்தும் மகளிர் தின விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட யசோதா, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் நடிகையர், நடிகர்கள் என பலரையும் அழைத்திருக்கிறார். அதில் நடிகைகள் கே.ஆர். விஜயா, ஜெயசித்ரா, மீனா போன்ற நடிகைகள் விழாவுக்கு வர ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகளுக்கு விருது ஒன்றையும் யசோதா வழங்குகிறார். மறைந்த காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி பெயரில் வழங்கப்படும் விருது நடிகை மீனாவுக்கும் வழங்கப்படும் என்று யசோதா முடிவு செய்து அறிவித்துள்ளார்.
இந்த விஷயம் தெரியாமல் யசோதா நடத்தும் மகளிர் தினவிழாவிற்கு முதலில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்ட நக்மா, தற்போது, மீனாவுக்கு விருது என்ற விஷயம் தெரிந்துவிட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு வர விருப்பமில்லை என்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
மீனாவிற்கு விருது கொடுப்பது தொடர்பான தகவல் கிடைத்த உடன் நக்மா, என்னிடம் சொல்லாமல் மீனாவுக்கு எப்படி விருது வழங்க முடிவு செய்தீர்கள்? இந்திராகாந்தி பெயரில் விருது பெறும் அளவுக்கு கட்சிக்கு மீனா என்ன தியாகம் செய்திருக்கிறார்? என கேள்வி கேட்டு யாசோதாவை கடுப்படித்தாராம்.
மீனா மீது நக்மாவுக்கு என்ன கடுப்போ?
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications