சாத்தூரில் நயினார் கரை சேர்வது கடினம் போல.. உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தியாம்.. களவரமான நிலவரம்?
விருதுநகர்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் வெல்வது கடினம் கள நிலவரம் தெரிய வந்துள்ளன. நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை நம்பாமல், நெல்லையில் இருந்தே பணியாற்றி இருக்கிறார். இதனால் இரு தரப்பும் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவான நிலையில், அது மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், Axis My India தவெக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

ஜேவிசி மற்றும் வோட் வைப் ஆகிய இரு தரப்பு மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவாக கணிப்பை வெளியிட்டுள்ளன. இதில் ஜேவிசி நீண்ட நாட்களாகவே அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிறுவனம் தான். இதனால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருத்து நிலவி வருகிறது. இதனிடையே பாஜக எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்ற விவாதமும் நடந்து வருகிறது.
குறிப்பாக நெல்லை தொகுதியில் இருந்து சாத்தூர் தொகுதிக்கு மாறிய நயினார் நாகேந்திரன் மீண்டும் சட்டசபை செல்வாரா என்ற கேள்வி உள்ளது. சாத்தூர் தொகுதியில் திமுக சார்பாக நாயுடு சமூகத்தைச் சேர்ந்த கடற்கரை ராஜ் களத்தில் இருக்கிறார். அதேபோல் சசிகலா தரப்பில் இசக்கி ராஜா என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர் முக்குலத்தோர் சமூக அமைப்பு வைத்திருப்பதால், நயினார் நாகேந்திரனுக்கு சவால் அளிப்பார் என்று கருதப்படுகிறது. அதேபோல் விஜய் தரப்பில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அஜித் களமிறக்கப்பட்டுள்ளார். இதில் இசக்கி ராஜா முக்குலத்தோர் அமைப்பு வைத்து நடத்தி வருபவர். இதனால் முக்குலத்தோர் வாக்குகளில் சுமார் 10 ஆயிரம் வாக்குகளை பிரிப்பார் என்று தெரிகிறது.
அதேபோல் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிக்கு மாறியதால், அங்கிருந்த பாஜக மற்றும் அதிமுகவினர் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் கடைசி நேர வைட்டமின் எம் விநியோகத்திற்கு கூட நெல்லையில் இருந்தே தனது குழுவை நயினார் நாகேந்திரன் இறக்கியுள்ளார். இதனால் அதிமுக மற்றும் பாஜகவினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தவெக வேட்பாளரும் கூட கணிசமான வாக்குகளை பிரிக்கிறார். இதனால் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் கரை சேர்வது கடினம் என்று கள நிலவரங்கள் சொல்லுகின்றன. நயினார் நாகேந்திரனுக்கு இணையாக திமுக வேட்பாளர் வைட்டமின்களை இறக்கி இருக்கிறார். இதனால் வெற்றி, தோல்வி இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications