For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிங்கப்பட்டி சம்பவத்துக்கு போலீஸே முழு பொறுப்பு- நல்லகண்ணு காட்டம்

Google Oneindia Tamil News

நெல்லை: கலிங்கப்பட்டி சம்பவத்துக்கு போலீஸ்தான் முழு காரணம். அங்கு நடந்தவற்றுக்கு போலீஸாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒருநாள் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

Nallakannu slams Police on Kalingapatti incidents

இதையொட்டி மதிமுக பொது செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில தஙகியிருந்தார். அங்கு வைகோவை இந்திய கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு சந்தித்து பேசினார். பின்னர் கலிங்கப்பட்டியில் மதுக்டையை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்ற வைகோவின் தாயார் மாரியம்மாளை பாராட்டி சால்வை அணிவித்தார்.

போராட்டத்தில் பங்கேற்ற வைகோவின் தம்பி ரவிச்சந்திரனிடம் நலம் விசாரித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டம் மற்றும் அதன் பின் நடந்த சம்பவங்களுக்கு காவல் துறைதான் முழுகாரணம். இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

மதுக் கடையை அகற்ற கோரிய வைகோ மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போடபபட்டுள்ளது. இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும். மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் பலவேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுவால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரும பாதிக்கப்பட்டுள்ளனர். இளைய சமுதாயத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. எனவே மதுவிலக்கை அமுல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.

English summary
Senior Communist leader Nallakannu has slammed police on Kalingapatti incidents
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X