நாமக்கல் கார் விபத்தில் 3 பேர் பலி- திருச்சி ஆம்னி பஸ்சில் தீ -30 பயணிகள் தப்பினர்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே ஓவியம்பாளையம் பிரிவு சாலை அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுரையிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ் நள்ளிரவு 1 மணிக்கு சமயபுரம் டோல்கேட்டில் டோக்கன் வாங்க நின்றபோது பஸ்ஸின் பின்புறம் புகை வந்துள்ளது. இதை கண்ட டோல்கேட் பாதுகாவலர்கள் பஸ்ஸின் டிரைவரிடம் தெரிவித்து உள்ளனர்.
அவர் உடனடியாக பஸ்ஸை சாலையோரம் நிறுத்தி 30 பயணிகளையும் அவசர, அவசரமாக கீழே இறக்கிவிட்டு உள்ளார். அதற்குள் வேகமாக தீப்பரவி பஸ் முழுவதும் தீப்பற்றி எரிய துவங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஆம்னி பஸ் முழுவதுமாக எரிந்து சேதமானது. டோல்கேட் பாதுகாவலர்களின் முன்னெச்சரிக்கையால் பயணிகள் யாரும் தீ விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications