நாமக்கல்லில் 103 வயது பாட்டியின் பிணத்தை புதைக்க நடந்த போராட்டம்
நாமக்கல்: நாமக்கல்லில் இறந்துபோன 103 வயதான பாட்டியின் பிணத்தை எடுத்துச் செல்லும் வழியில் எதிர்த்தரப்பினர் கம்பிவேலிகள் அமைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத்து.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொட்டணம்புதூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் ரங்கம்மாள் என்ற 103 வயது பாட்டி இறந்து விட்டார்.
பிணத்தை எடுத்து செல்லும் பாதையில் உள்ள நிலத்தை தனது நிலம் எனக்கூறி ஒருவர் கம்பி வேலி அமைத்துவிட்டார். இதனால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மூதாட்டி பிணத்தை எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது
150 வருடமாக பிணத்தை எடுத்து செல்லும் பாதையை அடைத்து பட்டா நிலம் என்று சொல்லி அந்த நிலத்தின் உரிமையாளர் கம்பிவேலி போட்டதற்கு காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
வழக்கமான பாதையில்தான் பிணத்தை எடுத்து செல்வோம் என்றும் கம்பி வேலியை அகற்றாவிட்டால் அந்த கம்பி வேலி அருகே பிணத்தை வைத்து மறியலில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர். கம்பி வேலி அகற்றப்படும் வரை பிணத்தை புதைக்க விடமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
இதனால் கிராமத்தில் பதட்டம் நிலவியது. இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த பொட்டணம்புதூர் காலனி பகுதியில் 70 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications