துக்க வீட்டிலிருந்து திரும்பிய 2 பெண்கள் கார் மோதி பரிதாப பலி
நாமக்கல்: நாமக்கல்லில் துக்கம் விசாரித்து விட்டு திரும்பியவர்கள் மீது கார் மோதியதில் இரு பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாமரத்துபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி காளியம்மாள். சுப்பிரமணியின் தம்பி ராமசாமியின் மனைவி பாப்பாயி.
இவர்களும் அதே பகுதியை சேர்ந்த தங்கம்மாள், சின்னப்பிள்ளை ஆகிய 4 பேரும் செவிட்டுரங்கன்பட்டியை சேர்ந்த இவர்களின் உறவினரான நடேசன் என்பவர் இறந்ததை தொடர்ந்து துக்கம் விசாரிக்க சென்றனர். அங்கு துக்கம் விசாரித்து விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருன்தனர்.
செவிட்டுரங்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு அவர்கள் நடந்து சென்றபோது, வளையப்பட்டியில் இருந்து மோகனூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக காரின் முன்பகுதி டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்த காளியம்மாள், பாப்பாயி, தங்கம்மாள் ஆகியோர் மீது மோதியது.
இந்த விபத்தில், காளியம்மாள், பாப்பாயி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் தங்கம்மாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications