அம்மா டாஸ்மாக் கடைனு பேர் வைங்களேன்... விஜயகாந்த் கிண்டல் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு, அம்மா டாஸ்மாக் எனப் பெயர் வைக்கலாமே என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை நெற்குன்றம் அழகம்மாள் சாலையில் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவனின் ஆரோக்கிய பேக்கரியை தலைவர் விஜயகாந்த் நேற்று திறந்து வைத்தார். அவருடன் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஏழை, எளியோருக்கு தையல் மிஷின், சலவை பெட்டி, ஹெல்மெட் ஆகியவற்றை விஜயகாந்த் வழங்கினார்.

பின்னர், அந்த விழாவில் அவர் பேசியதாவது:-

காமராஜர் பிறந்தநாள்...

காமராஜர் பிறந்தநாள்...

இன்று கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள். காமராஜர் ஏழை எளியோருக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க அரும்பாடு பட்டவர்.

அம்மா புராணம்...

அம்மா புராணம்...

ஒரு முதல்வர் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்தவர். புகழுக்காக ஆசைப்படாதவர். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும் அம்மா புராணம்.

சாதனைப் பேச்சு...

சாதனைப் பேச்சு...

இப்போதுள்ள நிலைமை பற்றி நாம் கூற வேண்டுமானால் தொலைகாட்சி நேர்காணலில் அதிமுக பிரமுகர்கள் பேசும்போது அம்மாவின் அந்த சாதனை, இந்த சாதனை என வர்ணிக்கின்றனர்.

அம்மா டாஸ்மாக்...

அம்மா டாஸ்மாக்...

பேசாமல் டாஸ்மாக் கடைக்கு, அம்மா டாஸ்மாக் கடை என்று பெயர் வைக்கலாமே' என இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+