நமீதா சொல்லும் பாதி உண்மை எதைப்பற்றி புரியுதா மக்களே?
பிக்பாஸ் வீட்டை பைவ் ஸ்டார் சிறை என்று கூறி நமீதா இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பாதி உண்மை' என்று ஆங்கிலத்தில் கவிதை எழுதியுள்ளார்.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பாதி உண்மை' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி பதிவிட்டுள்ளார்.
நீங்கள் யாரும் அந்த நிகழ்ச்சியை கவனிக்கவில்லை. பார்க்கமட்டும்தான் செய்தீர்கள் இதை அவர் கையால் எழுதி, கீழே கையெழுத்தும் போட்டுள்ளார்.

அந்த கவிதையில்
நீ காலையில் சிரிப்போடு எழுவாய்,
ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு ஆத்திரத்தை வரவழைப்பாள்
சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய்.
அதே பெண் மீண்டும் அடிப்பாள்
ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும்.
ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும்.
இது பாதி உண்மை தான்.
நீங்கள் அனைவரும் பார்த்த அந்தப் பாதியும் தப்பான பாதிதான்.
நீங்கள் என்னை ஜட்ஜ் பண்ணியது எனக்காகக் காட்டப்பட்ட வேடத்தைதான்.
அந்த நிகழ்ச்சி இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள்.
என்று தனது பதிவில் வேதனையை கொட்டியுள்ளார் நமீதா.
தனது பதிவின் கீழே, உண்மைதான் உன்னை வெளிக்கொண்டுவரும், அதுவரை கம்பீர முகத்தோட சிரி. உங்களால் வரிகளுக்கிடையே உள்ள செய்தியைப் புரிந்துகொள்ள முடியும் என்றால் இதுவும் உங்களுக்குப் புரியும் என்று பதிவு செய்திருக்கிறார் நமீதா.
நமீதாவின் பதிவு பிக்பாஸ் பற்றிதான் என்றும் அவர் கூறும் அந்த பெண் ஓவியாதான் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications