தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான்... சொல்கிறார் 'துடைச்சுக்குவேன்' புகழ் நாஞ்சில் சம்பத்!
டிடிவி தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான் என அவரது தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான் என அவரது தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனை எடப்பாடி தரப்பு ஒதுக்கி வைத்துள்ள நிலையில் நாஞ்சில் சம்பத்தின் இந்த பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து எடப்பாடி தரப்பு டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரள் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டதாக கூறினார்.
ஆனால் ஒரு மாத சிறைவாசத்துக்குப் பின் சென்னை திரும்பிய தினகரன் தீவிர அரசியல் ஈடுபட போவதாக கூறினார். மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இரு அணிகளும் இணைய 60 நாட்கள் கெடுவும் அளித்தார்.

எச்சரிக்கை விடுத்த டிடிவி
இதைத்தொடர்ந்து சில எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து கொடி பிடித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு என் செயல்பாடுகளை பாருங்கள் என இரு அணிகளுக்கும் எச்சரிக்கை விடுவது போல் பேசினார்.

பதுங்குவது பாய்வதற்குதான்
இருப்பினும் தினகரனும் சரி அவரது ஆதரவாளர்களும் சரி அடக்கியே வாசித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான் என கூறியுள்ளார்.

சுற்றுப்பயணம் செய்ய திட்டம்
மேலும் தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். அடுத்த மாதம் 5ஆம் தேதி தேனியில் முதல் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

மும்பை சென்றுள்ள தினகரன்
இதனிடையே தினகரன் இன்று காலை திடீரென மும்பைக்கு சென்றுள்ளார். காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து அவர் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications