காயத்ரி கண்ணை உருட்டுனா எலுமிச்சப்பழம் இப்படி உருளுதே!!
ஒருபக்கம் பாம்பு சீற்றம்... மற்றொரு பக்கம் பேய்.... இன்னொரு பக்கம் மந்திரவாதி காயத்ரி என சன் டிவியில் நந்தினி சீரியல் மூடநம்பிக்கையின் முழு உருவமாக உள்ளது.
சென்னை: மஞ்சக்காட்டு மைனா என்று பிரபு தேவா உடன் ஆடி பாடிய காயத்திரியை இப்படி அகோரமாக கண்ணை உருட்ட வைத்து கோரமாக சிரிக்க வைத்து பலரது தூக்கத்தை கெடுத்து வருகிறார் நந்தினி சீரியலின் கிரியேட்டிவ் ஹெட் சுந்தர். சி.
சன்டிவியில் இப்போது பேய், பாம்பு சீரியல்கள்தான் அதிகம் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போதய ஹாட் சீரியல் நந்தினி, நாகினி பாம்பு முடிந்த உடன் சூட்டோடு சூட்டாக பாம்பையும் பேயையும் வைத்து பின்னி விட்டார்கள். டைட்டில் பாடலே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சின்னக்குழந்தையையும் கணவனையும் பேயாக இருந்து காக்கும் ஜானகி, விஜயகுமார் குடும்பத்தை பலிவாங்க காத்திருக்கும் நந்தினி பாம்பு, விஜயகுமாரின் மகனை கொல்லத்துடிக்கும் மந்திரவாதி என கடந்த சில மாதங்களாக மக்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. 9
விஜயகுமாரின் சொத்துக்களுக்காக அவரது மகனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து வைக்கத் துடிக்கும் மச்சினன். காதல் திருமணம் செய்த ஜானகியை குழந்தை பிறந்த தினத்திலேயே கொலை செய்வது கொடூரம்.

ஜானகி பேய்
நிறைவேறாத ஆசையோடு செத்துப்போன ஜானகி பேயாக உலா வருகிறார். தனது கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கத் துடிக்கும் உறவினர்களை பழிவாங்குகிறாள். இன்னொரு பக்கம் விஜயகுமாரின் மகனை ஒருதலையாக காதலித்த ஜானகியின் தோழி தற்கொலை செய்து கொள்ள, தன் தங்கையின் சாவுக்கு காரணமானவை பழிவாங்க வருகிறாள் காயத்ரி.

புற்றுக்குள் பாம்பு
வீட்டிற்குள் உள்ள புற்றில் இருந்து சீறிக்கொண்டிருக்கிறது நந்தினி பாம்பு. அந்த பாம்பை தாயத்துகளைப் போட்டு கட்டி வைத்திருக்கிறார் நம்பூதிரி. பவுர்ணமி தினங்களில் வீட்டிற்கு பூஜை செய்து துஷ்ட சக்திகளை விரட்டுகிறார்.

வெளியே வந்த பேய்
ஜானகியின் ஆவி வீட்டிற்குள் சுற்றி வருவதை கண்டு பிடித்த நம்பூதிரி அதை பிடித்து சங்கிற்குள் கட்டி வைக்க, சும்மா இருந்த பேயை மீண்டும் திறந்து விட்டு அதை மீண்டும் அகோரமாக சிரிக்க வைத்திருக்கிறார்கள். கொலைக்கு காரணமானவர்களை மீண்டும் கொல்கிறது ஜானகியின் ஆவி. ஒரு உருவத்தையை அப்படியே கரைந்து போக செய்வது கற்பனையின் உச்சம். பேய் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யும் போல.

மந்திரவாதியின் மாயம்
அரண்மனைக்குள்ளேயே மந்திரவாதி காயத்ரி வந்து அமர்ந்து கொண்டு நடுநிசி பூஜை செய்வது அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தெய்வ சக்தி கொண்ட கங்காவிற்கு கூடவா தெரியாது. ஓம்... ரீம்... என்று அத்தனை சத்தமாகவும்... கண்களை உருட்டியும் காயத்ரி செய்யும் சேட்டைகள்.... ஸ்ஸ் அப்பா என்றிருக்கிறது.

கண்ணை உருட்டும் காயத்ரி
ஏன்தான் இந்த காயத்ரியை இப்படி கண்களை உருட்ட விட்டு கோரமாக சிரிக்க வைத்திருக்கிறாரோ சுந்தர். சி. மாகாளி பத்ரகாளி அகோரி என்று காயத்ரி செய்யும் மந்திர உச்சாடனங்கள் ஏய் யப்பா... சின்னக்குழந்தைங்க கூட இப்படி விழுந்து விழுந்து சிரிக்குதுகளே!

எலுமிச்சை வளையம்
எலுமிச்சைகளை மொத்தமாக குவித்து வைத்து பூஜை செய்ய காயத்ரி கண்களை உருட்டும் போது அத்தனையும் உருண்டு வந்து வளையமாக ஜானகி பேயை கட்டிப்போடுகிறது. பேய் தப்பிக்குமா? மந்திரவாதியிடம் இருந்து கணவன், குழந்தையை காப்பாற்றுமா என்று இல்லத்தரசிகளின் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டார் காயத்ரி.
பாம்பு வருமோ?
புற்றுக்குள் இருக்கிற பாம்பு இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் சீறிக்கொண்டிருக்குமோ சீக்கிரம் வெளியே விடுங்கப்பா என்னையை என்கிறது. இனி அந்த பாம்பு வெளியே வந்து கங்கா உடம்பில் புகுந்து கொள்ளுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூட நம்பிக்கை சீரியல்களை பிரைம் டைமில் ஒளிபரப்பக் கூடாது என்று சொன்னாலும் டிவி சேனல்கள் காதில் போட்டுக்கொள்வதில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications