நாங்குநேரி இரட்டை கொலை - 20 பேர் கைது
நெல்லை: நாங்குநேரி அருகே நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கரந்தாநேரி மற்றும் பாணங்குளத்தை சேர்ந்த இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி இரவு கரந்தாநேரியை சேர்ந்த வேலுச்சாமி, மாரிக்கனி மற்றும் நெடுங்குளம் கணேசன் ஆகியோர் வெட்டப்பட்டனர். இதில் மாரிகனி, வேலுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பாணங்குளத்தை சேர்ந்த 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாங்குநேரி டிஎஸ்பி சண்முகம், வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய பாணங்குளத்தை சேர்ந்த சின்னபாண்டி, கருப்பசாமி, ரெங்கன், செல்வம், மற்றொரு கருப்பசாமி ஆகிய 5 பேரை தனிப்படையினர் முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் விசாரணை நடத்தினார்.
இதில் பாணங்குளத்தை சேர்ந்த சின்னபாண்டி, வானமாலை ஆகியோர் டிவி பழுது பார்ப்பதற்காக கரந்தாநேரி வழியாக பைக்கில் சென்றிருக்கின்றனர். இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாணங்குளத்தை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கில் வேலுசாமி, மாரிக்கனியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் சேரன்மகாதேவி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மாயக்கண்ணன் அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். மற்ற 10 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கொலையான வேலுச்சாமியின் உறவினர்கள் விரைந்து வந்து கராந்நேரி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் மற்றொரு பிரிவினர் வேலுச்சாமி வீட்டை நோக்கி கற்களை வீசயதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி பாணங்குளததை சேர்ந்த நல்லகண்ணு, சுப்பிமணியன், முருகன், பழனி, பண்டாரம், சுப்பையா, ஜெய்சங்கர், சண்முகவேல், கொம்பையா, மற்றொரு கொம்பையா, முருகன், நம்பிராஜன், வேல்முருகன், முத்து, ஆபத்துகாத்தான் ஆகிய 15 பேரை கைது செய்தனர். அவர்கள் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications