சிம்பு திருந்துவார் என்று காத்திருக்கும் நாஞ்சில் சம்பத்
சென்னை: பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டிய பெரியார் வாழ்ந்து வரலாறு படைத்த தமிழ்நாட்டில், இன்றைக்கு ஒரு இருண்ட காலத்துக்கு தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதைப் போல சிம்பு இப்படி ஒரு "பீப்" பாடலைப் பாடியதன் மூலம், தமிழகத்துப் பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார். பெண்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி இருக்கும் சிம்பு திருந்துவார் என்று காத்திருப்பதாக கூறியுள்ளார் அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
இன்றைய சூழ்நிலையில் தான் எதற்கெல்லாம் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத். இந்த பேட்டியை படித்ததுதான் தாமதம் அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் டுவிட்டர்வாசிகள்.
தனது காத்திருப்பு பற்றி கூறியுள்ள நாஞ்சில் சம்பத், 'இது குழந்தை பாடும் தாலாட்டு... இது நதியில்லாத ஓடம்' என்று பாடல் எழுதிய டி.ராஜேந்தர் மகனா இப்படி சீரழிகிறார் என்று எண்ணுகிறபோது என் சிந்தை வலிக்கிறது.

சிம்பு திருந்துவார்
பெண்களைக் கண்களாக கொண்டாடுகிற பெருந்தன்மை உள்ள தமிழகத்தில், பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டிய பெரியார் வாழ்ந்து வரலாறு படைத்த தமிழ்நாட்டில், இன்றைக்கு ஒரு இருண்ட காலத்துக்கு தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதைப் போல சிம்பு இப்படி ஒரு "பீப்" பாடலைப் பாடியதன் மூலம், தமிழகத்துப் பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார். அவர்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் திருந்துவார் என்று காத்திருக்கிறேன்.

கழகத்தின் சிப்பாய்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 28-வது நினைவு நாளில் அவரை வணங்கிப் போற்றும் அம்மா அவர்களுக்காக ஆயுதத்தைக் கீழே போடாத கழகத்தின் சிப்பாயாக அணிவகுக்கக் காத்திருக்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி. இந்தக் கட்சியை எந்த வகையிலும் எதிர்கொள்ள முடியாத சில பேர்வழிகள், மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து விட்டவர்கள், குடும்ப அரசியல் நடத்தி தமிழகத்தை குட்டிச் சுவராக்கியவர்கள், சொந்த சுய லாபத்திற்காக தமிழகத்தின் உரிமையைக் காவு கொடுத்தவர்கள், இன்றைக்கு தப்புத் தப்பாய் செய்கின்ற எல்லாப் பிரசாரத்தையும் அதே வழியில் எதிர் கொள்ளக் காத்திருக்கிறேன்.

மீண்டும் முதல்வராக
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனை மீட்டுத் தந்து அதை ஒரு பொதுத்துறை நிறுவனமாக மீண்டும் இயங்குவதற்கு வாய்ப்பளித்த அம்மாவை மீண்டும் முதல்வராக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.காவேரி பிரச்னையில், நடுவர் மன்றத்தினுடைய இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, காவிரி நீரில் தமிழக மக்கள் உரிமையை நிலைநாட்டித் தந்த அம்மாவை அரியணையில் அமர்த்த, தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

நானும் காத்திருக்கிறேன்
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கி தென்னக மாவட்டங்களுக்கு பாசனத்துக்கும், தாகத்துக்கும், தண்ணீருக்கும் உத்தரவாதம் தந்த அம்மாவை மீண்டும் முதலமைச்சராக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களோடு நானும் மக்களில் ஒருவனாகக் காத்திருக்கிறேன்...! என்று கூறியுள்ளார்.
|
கலாக்கும் வலைஞர்கள்
நாஞ்சிலாரின் பேட்டிக்கு பதிலாக மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர் டுவிட்டர்வாசிகள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications