நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவின் நிலைமை முடிந்துவிடும்: நாஞ்சில் சம்பத்
விழுப்புரம்: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவின் நிலைமை முடிந்துவிடும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள் அனைத்து வகையிலும் நிறைவாக வாழ்கின்றனர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயரத் தேவையான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கையில் இது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக் கூட்டமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்வரின் சாதனைகள் குறித்து கேட்க வந்த மக்கள் கூட்டம் இது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

தேமுதிக அவ்வளவு தான்
தங்களால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்ததாக தேமுதிகவினர் கூறினர். அப்படி என்றால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போது எங்கு சென்றீர்கள்?. உங்கள் நிலைமை என்ன ஆனது. இது தான் தேமுதிகவின் நிலை ஆகும். அனேகமாக வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிகவின் நிலைமை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

திமுகவின் கடைசி தேர்தல்
திமுக சந்திக்கும் கடைசி தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தல் தான் என்பதையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் ஈழம் பற்றி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை. பதவியில் இருந்த போது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது டெசோ அமைப்பை அமைத்துக் கொண்டு பேசுகிறார்.

கருணாநிதிக்கு தைரியம் இருந்தால்
கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் டெசோ கூட்டத்தை கூட்டி அதில் இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பாரா என்று கேட்கிறேன்.

திமுக ஆட்சி
கடந்த 2006ம் ஆண்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது தான் தமிழக மக்கள் செய்த தவறு ஆகும். அதன் பலனாக இலங்கையில் 4வது தமிழினப் போர் நடந்தது. அதில் 1,70,000 ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அம்மா பிரதமர் ஆனால்
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆனால் தான் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.

கேட்காமல் கொடுக்கும் அம்மா
பேரறிஞர் அண்ணா ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்றார். ஆனால் முதல்வர் அம்மாவோ 20 கிலோ அரிசியை இலவசமாக அளித்து மக்களின் பசியை போக்கியவர். இப்படி கேட்காமலேயே கொடுக்கும் முதல்வருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications