எங்க பார்த்தாலும் இலை அலைதான்... மதுரையிலிருந்து நாஞ்சில் சம்பத்!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தம் இல்லாமல் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி தமிழர்கள் 7 பேரை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
இது அவர் செய்த சாதனைகளிலேயே முதன்மையானது. உலக தமிழ் இனமே வியந்து பாராட்டுகிறது. ஆனாலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு இன்னும் ரத்தவெறி அடங்கவில்லை. தமிழனுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில்தான் மத்திய அரசு குறியாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் அந்த அரசு துடைத்து எறியப்படும்.
7 பேர் விடுதலை அறிவிப்பை பாரதீய ஜனதா தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், அருண்ஜெட்லி போன்றோர் அரசியல் நடவடிக்கை என்று குறை கூறி வருகிறார்கள். இந்த கூட்டணியில் தான் வைகோ இருக்கிறார். அவருக்கு பாரதீய ஜனதா தலைவர்களின் கருத்து ஏற்புடையது தானா? ஏன் இன்னும் வைகோ மோடிக்கு காவடி தூக்குகிறார் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. அடுத்த பிரதமராக அம்மாவை அரியனையில் அமர வைக்க இலை அலை தான் வீசுகிறது.
தமிழகத்தின் அ.தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. தமிழ் இனத்தின் ஒரே தலைவராக முதல்வர் அம்மா திகழ்கிறார் எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார் சம்பத்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications