For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜாளி பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை போல் பார்த்தனர் - நாஞ்சில் உருக்கம்

ராஜாளி பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை போல் பார்த்தனர் என நாஞ்சில் சம்பத் உருக்கமாக தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் அன்னை மீது ஆணையாக தினகரன் கூட சேரமாட்டேன் - நாஞ்சில் சம்பத்- வீடியோ

    ராஜாளி பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை போல் என்னை பார்த்தனர் என நாஞ்சில் சம்பத் உருக்கமாக தெரிவித்தார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பை டிடிவி தினகரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கினார். இதில் நாஞ்சில் சம்பத்துக்கு விருப்பம் இல்லை என கூறப்பட்டது.

    அதனால்தான் அவர் மேலூர் பொதுக் கூட்டத்துக்கு வரவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் குரங்கணி தீவிபத்தில் நாஞ்சிலின் உறவினர் பலியாகிவிட்டதால் அந்த அலுவல்களில் அவர் கலந்து கொள்ள சென்றுள்ளதாக சம்பத் தரப்பு கூறியது.

    உடன்பாடில்லை

    உடன்பாடில்லை

    இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அணியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் பெயரில் எனக்கு உடன்பாடில்லை.

    இலக்கிய மேடைகளில்

    இலக்கிய மேடைகளில்

    திராவிடமும் அண்ணாவும் இல்லாத இடத்தில் பேச எனக்கு விருப்பம் இல்லை. எனவே அந்த அணியிலிருந்து விலகுகிறேன். அரசியலுக்கே முழுக்கு போடுகிறேன். இனி என்னை இலக்கிய மேடைகளில் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    வெளியேறியது குறித்து விளக்கம்

    வெளியேறியது குறித்து விளக்கம்

    திராவிடத்தை புறக்கணிவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் வெளியேறியதால் எங்களுக்கு எந்தவித இழப்பும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தடாலடியாக தெரிவித்தார். இந்நிலையில் நாஞ்சில் சம்பத் தான் வெளியேறியது குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    தக்கதுணையாக இருந்தேன்

    நாஞ்சில் சம்பத் கூறுகையில் இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் @TTVDhinakaran அவர்களுக்கு துணை நின்றேன் , தோள் கொடுத்தேன் , அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.

    சிக்கிய புழுவை பார்ப்பதை போல்

    அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன் என்று தனது பதிவுகளில் கூறியுள்ளார்.

    English summary
    Nanjil Sampath says about why he quit from TTV Dinakaran faction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X