ஜெ.வை சட்டசபையில் தாக்கியது யார்.. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது யார்.. நாஞ்சில் சம்பத் கேள்வி!
காஞ்சிபுரம்: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவை தாக்கியது திமுகவினர்தான். சட்டசபை ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியது திமுகவினர்தான். அவர்கள் இன்றைக்கு சட்டசபை ஜனநாயகம் குறித்துப் பேசுகிறார்கள் என்று அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
கா{ஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில், தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து....

நடப்பது நல்லாட்சி
தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களும் உற்று நோக்கும் வகையில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு வருகின்றார்.

சட்டசபை ஜனநாயகம் பற்றிப் பேசும் திமுக
இன்றைக்கு சட்டசபையில் ஜனநாயகம் பற்றி தி.மு.க. பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றது. சட்டசபையில் ஜனநாயகத்தினை கேலிக் கூத்தாக்கிய பெருமை தி.மு.க.வையே சாரும்.

ஜெ.வைத் தாக்கினரே...
சட்டசபையில் இன்றைய தமிழக முதல்வரை தாக்கியது தி.மு.க. வினர்தான். அறிஞர் அண்ணாவின் குடும்பத்தினரையே கண்டு கொள்ளாத கருணாநிதி தன்னுடைய கட்சி தொண்டனை எப்படி கண்டு கொள்வார்.

செயல் திறன் படைத்த ஒரே முதல்வர்
ஆனால், தமிழக முதல்வர் அம்மா அறிஞர் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி 75 லட்ச ரூபாயினை அளித்தவர் ஆவார். இன்றைக்கு அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் என மக்களின் தேவையினை அறிந்து அதனை திறம்பட செயலாற்றும் செயல்திறன் படைத்த ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டுமே என்றார் சம்பத்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications