மது வாடைன்னா என்னவென்றே தெரியாத விஜயகாந்த்... நாஞ்சில் சம்பத் "அட்டாக்"

Subscribe to Oneindia Tamil

மதுரை: 50 பேர வைத்துக் கொண்டு மனிதச் சங்கிலி என்று கூறி மது விலக்குக்கு ஆதரவாக போராடுகிறார் விஜயகாந்த். அவருக்கு மது வாடை என்றால் என்னவென்றே தெரியாது பாருங்க என்று கிண்டலடித்துள்ளார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.

மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு விஜயகாந்த்தை விமர்சித்தார் நாஞ்சில் சம்பத்.

நாஞ்சில் சம்பத் பேச்சிலிருந்து சில துளிகள்... இந்தப் பேச்சில் பல வரிகள் டிரிபிள் மீனிங்கில்தான் இருந்தன என்பது விசேஷமானது.!

அர்த்த ராதிரியில் சாட்சி இல்லாமல்

அர்த்த ராதிரியில் சாட்சி இல்லாமல்

அர்த்த ராத்திரியில் சாட்சி இல்லாமல் பிறந்தவர்கள் எல்லாம் அடுத்த ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். திண்டிவனத்தை தாண்டி வர முடியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்.

அதிமுக பட்டத்து யானை

அதிமுக பட்டத்து யானை

தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சிக்காரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதிமுக என்ற பட்டத்து யானையை வீழ்த்த முடியாமல், மக்கள் ஆதரவுமில்லாததால், இப்போது மதுவை நம்பியுள்ளனர்.

நாசமாக்கியவர் யார்

நாசமாக்கியவர் யார்

மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி பல ஆண்டுகளாக தமிழகத்தை நாசமாக்கியவர் கருணாநிதி. அவரெல்லாம் இப்போது பேசுகிறார். அந்த குற்றவாளியுடன் கலிங்கப்பட்டி போராளி ஒருவர் சேர்ந்துள்ளார்.

என்ன கொடுமை என்றால்

என்ன கொடுமை என்றால்

இதில் கொடுமை என்னவென்றால் இந்தப் போராளி கலிங்கப்பட்டியில் அடித்து நொறுக்கிய மதுக்கடையின் பங்குதாரர் அவரது தம்பி ரவிச்சந்திரன். இந்த கடையை ஆரம்பத்தில் எடுத்துக் கொடுத்தவர் வைகோதான். இந்த கடையை திறந்தபோது வைகோ எங்கே போனார். இவ்வளவு நாளில்லாமல் இப்போது மட்டும் அது ஞாபகத்துக்கு வந்தது எப்படி?

அசைக்க முடியாது

அசைக்க முடியாது

இப்படியெல்லாம் கடையை உடைத்து எங்கள் புரட்சித்தலைவியின் ஆட்சியை அசைத்து பார்க்க முடியாது. கலிங்கப்பட்டியில் நடந்த கலவரம் வைகோவால் திட்டமிடப்பட்டது. இல்லையென்றால் சென்னை, மதுரை என்று பல மாவட்ட செயலாளர்கள் அங்கு வரக் காரணம் என்ன?

பிணத்தை வைத்து அரசியலா

பிணத்தை வைத்து அரசியலா

நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியை கேள்வி கேட்டேன், ராஜீவ் காந்தியை கேள்வி கேட்டேன் என்று சொல்லும் வைகோ, இவ்வளவு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட என்ன காரணம். பொணத்தை வைத்து அரசியல் செய்கிறார். கூலிங் கிளாஸ் போட்டு சசிபெருமாளின் பிணத்தை தூக்கும்போதே எந்தளவுக்கு வைகோ விளம்பரத்தை விரும்புகிறார் என்பது தெரிந்து விடுகிறது.

விஜயகாந்த்துக்கு வாடையே தெரியாதா

விஜயகாந்த்துக்கு வாடையே தெரியாதா

மதுவின் வாடையே என்னவென்று தெரியாத விஜயகாந்த், ஐம்பது பேரை வைத்துக்கொண்டு மனித சங்கிலி நடத்துகிறார்.

உங்கள் உடல் நிலை எப்படி இருக்கு

உங்கள் உடல் நிலை எப்படி இருக்கு

புரட்சித்தலைவி அம்மாவின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பி, வெள்ளை அறிக்கை வெளியிடக்கோருகிறார் கருணாநிதி. முதலில் உங்கள் உடல்நிலை, அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்லும் உங்கள் மகன் ஸ்டாலின், உங்கள் குடும்பத்தினரின் உடல் நிலைபற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+