தொல்லை தரும் கிரண்பேடி... கருணாநிதி வலியுறுத்திய மாநில சுயாட்சி தேவை : நாராயணசாமி கோரிக்கை
Recommended Video

சென்னை: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தரும் தொல்லையைப் பார்க்கும்போது கருணாநிதி வலியுறுத்திய மாநில சுயாட்சியை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியானது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில் கட்சித் தலைவராக, முதல்வராக இருந்து தமிழகத்தை கட்டிக் காத்தவர் கருணாநிதி.
எல்லோரையும் ஈர்க்கக் கடிய சக்தி வாய்ந்த பேச்சாளர் கருணாநிதி. தமிழக மக்கள் வாழ வேண்டும் என்று பாடுபட்ட தலைவர். தமிழர்களுக்கு இன்னல் இழைக்கப்பட்டபோதெல்லாம் கருணாநிதியின் குரல் ஒலித்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்து காட்டியவர் கருணாநிதி. சமூக நீதியில் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையுடன் பெரியார் வழியில் வாழ்ந்து காட்டியவர் கருணாநிதி. கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி.
கிரண்பேடி தரும் தொல்லையைப் பார்க்கும்போது மாநில சுயாட்சியை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக சொல்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள உரிமையை யாரும் பறிக்கக் கூடாது என்று போராடியவர் கருணாநிதி.
கருணாநிதி இல்லாமல் சட்டசபைக் கூட்டம் நடந்ததில்லை. மக்கள் பிரச்சினைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி பாடுபட்டவர் கருணாநிதி. கருணாநிதி மறைந்தபோது அமைச்சரவையைக் கூட்டி முதல் இரங்கல் தீர்மானத்தை புதுச்சேரிதான் நிறைவேற்றியது.
கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்கும் அறிவிப்பையும் வெளியிட்டோம். காரைக்கால் பகுதியிலும் தெருக்களுக்குப் பெயர் வைத்துள்ளோம். புதுச்சேரி பல்கலையில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். உலகத் தமிழர்களால் போற்றப்படும் தலைவர் கருணாநிதி.
இப்படிப்பட்ட தலைவரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். ஸ்டாலின் தலைமையில் தமிழகம் வளம் பெறும் என்றார் நாராயணசாமி.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications