''நம்புங்கள் நாராயணனை....!''

Subscribe to Oneindia Tamil

Narayanasamy hopes PM will not attend Commonwealth meet
கோவை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார் என நம்புகிறேன். தமிழர்களின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளிப்பார் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும் அமைச்சர் நாராயணசாமி இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அங்கு நடந்த மத்திய அரசு பணியாளார் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர்கள் மாநாட்டில் கலந்து கொண்டஅவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக கோவையிலும் மத்திய அரசு தேர்வு மையம் அமைக்க வேன்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் கோவையிலும் தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருப்பது குறித்து, நீதிமன்ற உத்தரவினை முழுமையாக படித்த பின்னரே விளக்கம் அளிக்கப்படும். ஆதார் அட்டைக்காக 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இதுவரை 40 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம்.

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவர்கள் மற்றும் இந்திய-இலங்கை அரசுகள் கலந்து கொள்ளும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இலங்கை சிறையில் உள்ள 59 மீனவர்களை மீட்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் நான், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் உள்ளிட்டோரும் இதை வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளித்து, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என நம்புகிறேன். பிரதமர் இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றார் நாராயணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+