புதுவை ஆளுநர் கிரண்பேடியுடன் நாராயணசாமி சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
புதுச்சேரி: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணன்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த மே 16-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள் 30 தொகுதிகளில் காங்கிரஸ்- திமுக கூட்டணி 17 இடங்களைக் கைப்பற்றியது; காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றது.

இதையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியானது. ஆனால் யார் முதல்வர் என்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. பின்னர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் புதுவையின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்த நாராயணசாமி, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தமக்கு ஆதரவு தந்துள்ள 17 எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தையும் ஆளுநரிடம் நாராயணசாமி வழங்கினார்.
இச்சந்திப்பின் போது புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் உடனிருந்தார். விரைவில் நாராயணசாமி ஆட்சி அமைக்க ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுக்க உள்ளார்.
இதனிடையே ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இன்று மாலை நானும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறோம். காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுலுடன் புதுவை அமைச்சரவை குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications