கைது செய்யப்பட்ட சசிகலா கணவர் நடராஜன் நள்ளிரவில் கோர்ட்டில் ஆஜர்- புழல் சிறையில் அடைப்பு!!
சென்னை: கராத்தே வீரர் ஹூசைனியை மிரட்டிய புகாரின் பேரில் குற்றாலத்தில் கைது செய்யப்பட்ட, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம். நடராஜன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள், சிலைகள் செய்து தருவதற்காக சசிகலாவின் கணவர் எம். நடராஜன், கராத்தே வீரர் ஹுசைனிக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஒப்புக்கொண்டவாறு ஹுசைனி சிலைகளை செய்து தராததால் பணத்தை திருப்பித் தருமாறு நடராஜன் தரப்பினர் கேட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக போலீசில் ஹூசைனி மீது சென்னை போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூசைனியும் தமது பங்குக்கு ஒரு புகார் கொடுத்தார், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்த அவர், நடராஜன் தனது இல்லத்திற்கு வரவழைத்து ஹுசைனியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார் மனு கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் குற்றாலத்தில் நடராஜனை நேற்று காலையில் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நள்ளிரவில் நடராஜன் ஆஜர் செய்தனர்.
நடராஜனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications