தஞ்சையில் சசிகலா நடராஜன் பொங்கல் விழா... ஜனாதிபதி வருகையால் உற்சாகம்
தஞ்சாவூர்: என்ன செய்கிறார் எம். நடராஜன் என்று கேட்கும் அளவிற்கு அமைதியாக இருப்பார் சசிகலாவின் கணவர் நடராஜன். பொங்கல் பண்டிகை நேரத்தில் சுறுசுறுப்பாக மாறிவிடுவார். இந்த ஆண்டும் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் தஞ்சாவூரில் பொங்கல் விழாவைக் கொண்டாட பிரமாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார் எம்.நடராஜன்.
ஜனவரி 16ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருவது உறுதியாகிவிட்டதாம். நடராஜனின் ஆதரவாளர்கள் சும்மாவே பரபரப்பை கூட்டுவார்கள், ப்ளெக்ஸ், பேனர்கள் என்று கலக்குவார்கள் இந்த ஆண்டு ஜனாதிபதி வருகிறார் என்றால் கேட்கவா வேண்டும். இப்போதே தூள் கிளப்ப ஆரம்பித்துவிட்டார்கள். தொலைக்காட்சி சேனல்களிலும் விளம்பரங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
நடராஜனின் தந்தை மருதப்பர். மறைந்த இவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஒவ்வொரு வருடமும் தஞ்சாவூரில் பொங்கல் விழா நடத்தி கலக்குவார் நடராஜன். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் விழாவின் போது மதுரை ஆதீனம், பிரபல சினிமா இயக்குநர்கள், முன்பு எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோ மானேஜராகவும், எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த ஆர்.எம்.வீரப்பன் போன்றோரை அழைத்து பேச வைப்பார்.

தஞ்சையில் பொங்கல் விழா
தஞ்சாவூரில் தமிழர் கலை இலக்கியத் திருவிழா என்ற பெயரில் இந்த ஆண்டும் ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் ராஜராஜ சோழன் மணிமண்டபம் எதிரே உள்ள தமிழ்அரசி மண்டபத்தில் விழாவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படு பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

பிரணாப் முகர்ஜி
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட 14 பேரை கட்சியை விட்டே நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியே பங்கேற்கிறார் என்பதால் கூடுதலாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012 பொங்கல் விழா
சசிகலா போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூரில் பொங்கல் விழா நடக்க வேண்டும். நடராஜன் வெளியே வருவாரா, மாட்டாரா என்று கேள்வி எழுந்தது. தன் சொந்தங்களுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பி தஞ்சாவூரில் பொங்கல் விழாவை நடத்தினார் நடராஜன். அங்கு "அ.தி.மு.க. ஆட்சி அமைய நானும் காரணம்" என்ற ரீதியில் பேசினார் எம்.நடராஜன்.

கட்டுப்பட்டு இருக்கிறேன்
தொடர்ந்து பேசிய எம். நடராஜன், இதுவரை கட்டுண்டோம். பொறுத்திருந்தோம். காலம் மாறி இருக்கிறது. மாற்றுவோம். சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு என்பது போல கட்டுப்பாடற்ற நடராஜனாகி இருக்கிறேன். நான் இரண்டு பேருக்குத்தான் கடடுப்பட்டு இருக்கிறேன். ஒருவர் (பழ.நெடுமாறன்) ஐயா, மற்றொருவர் என் மனைவி (சசிகலா). வேறு எவருக்கும் கட்டுப்பட மாட்டேன் என்றும் கூறினார்.

சசிகலா நடராஜன்
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் வாரிசுகள் சுந்தரவதனன்,விநோதகன், ஜெயராமன்,வனிதாமணி, சசிகலா, திவாகரன்.திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தைச் நடராஜனுக்கும் கருணாநிதி முதல்முறையாக முதல்வரான போது அவரது தலைமையில் திருமணம் நடைபெற்றது. நடராஜனுக்கு ஏ.பி.ஆர்.ஓ வேலை போட்டுக்கொடுத்ததும் கருணாநிதிதான்.

போயஸ் தோட்டத்தில் சசி
சூட்டோடு சூட்டாக சென்னையில் வாழ்க்கையை தொடங்கிய நடராஜன் - சசிகலா தம்பதியர் வினோத் வீடியோ விசனை தொடங்கினர். வீடியோ கடை நிர்வாகம் சசிகலா கையில் வந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா.

நட்புக்கு முக்கியத்துவம்
அ.தி.மு.க.வின் அதிகாரத்திற்கு அருகில் இருந்த போதும் சரி, வெளியே இருந்த போதும் சரி, "எல்லாம் என்னால் நடக்கிறது" என்ற இமேஜை வெளியுலகத்தில் வெற்றிகரமாக உருவாக்கி வந்தவர் நடராஜன். ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தருவது நான்தான் என்று நடராஜன் எங்கோ, எப்போதோ சொன்னதாக தகவல் எட்ட அதுமுதல் நடராஜன் - ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடிக்கிறது. நட்புக்கு மரியாதை கணவரா, தோழியா என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுக்கிறார் சசிகலா. அதுமுதல் கணவன் மனைவி உறவை விட நட்புதான் முக்கியம் என்பதை நிரூபித்து வருகிறார் சசிகலா.

வெளியேற்றப்பட்ட ஏன்?
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்து கொடுத்ததே நான் தான். எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு, அ.தி.மு.க.,வில் இருந்து, ஜெயலலிதா ஓரம் கட்டப்பட்டார். அதில் இருந்து மீண்டு, கட்சியை அவர் கைப்பற்ற முக்கிய உதவிகள் செய்தது நான் தான். ஆனால், ஒரு கட்டத்தில், இதை, ஜெயலலிதா ஒப்புக் கொள்ள மறுத்தார். எனவே தான், போயஸ் கார்டனில் இருந்து நான்வெளியேற்றப்பட்டேன் என்று கடந்த 2014ம் ஆண்டு ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சசிகலா வெளியேறுவார்
தான் நினைத்தது போல செயல்படுபவர் ஜெயலலிதா. அதில், தலையிட நான் விரும்பவில்லை. முதல் முறையாக தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த பிறகு, தங்களால் தான் அந்த வெற்றி கிடைத்தது என, யாரும் உரிமை கேட்க கூடாது என்றே அவர் கருதினார்.
ஜெயலலிதா வீட்டிற்குள் சசிகலா மீண்டும் சென்றதற்கு, சொத்து குவிப்பு வழக்கு மட்டுமே காரணம். அந்த வழக்கு மட்டும் இல்லையென்றால், ஜெயலலிதாவே, சசிகலாவை வெளியேற்றி இருப்பார். அது தான், அவரது குணம். சொத்து குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்த உடன், நான் வந்து விடுவேன். அதுவரை, அமைதியாக இருங்கள்' என, என் குடும்ப உறுப்பினர்களிடம், சசிகலா வாக்குறுதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இணைத்து வைத்த விழா
கடந்த ஆண்டு பொங்கல் விழாவின் போது நடராஜன் தலைமை உரையாற்றுவதற்கு முன்பு மேடை ஏறிய அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் "நடராஜன் தம்பதியர் நீடூழி வாழ்ந்து தமிழ்நாட்டிற்கு தொண்டு செய்ய இறைவனை வேண்டுகிறோம்" என்ற வாசகம் அடங்கிய ஷீல்டை கொடுத்தனர். தோழியுடன் இருக்கும் சசிகலா, தன் கணவர் நடராஜனுடன் இணைய வேண்டும் என்பதே எங்களோட விருப்பம்" என்று கூறினர் நடராஜனின் ஆதரவாளர்கள்.

இந்த ஆண்டு என்ன பேசுவாரோ?
இன்னும் சில தினங்களில் பொங்கல் விழா கொண்டாடப்போகிறது. விழாவில் பேசப்போகும் நடராஜன் என்ன வெடிகுண்டை வீசப்போகிறாரோ என்று இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் அவரது ஆதரவாளர்கள். உளவுத்துறையினரும் நடராஜனின் பேச்சை கேட்க ஆவலாகவே இருக்கின்றனராம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications