நமது அம்மாவில் ம. நடராஜன் மரணச் செய்தி... பட்டும் படாமலும்
சசிகலா கணவர் நடராஜன் மறைவு பற்றி நமது அம்மா நாளிதழில் பட்டும் படாமலும் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை: நடராஜன் மறைவுக்கு முதல்வர், துணைமுதல்வர் இரங்கல் கூறவில்லை. அமைச்சர்கள் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை. அதே நேரத்தில் நமது அம்மா நாளிதழில் பட்டும் படாமலும் செய்தி வெளியாகியுள்ளது.
புதியபார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தவிர சில எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதல்வர், துணைமுதல்வர் யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அமைச்சர்கள் யாரும் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், சசிகலா குடும்பத்தினருடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முடிவெடுத்தபின் நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என்று கூறினார்.
அம்மாவே ஒதுக்கி வைத்து விட்டார். அதன் பிறகு நாங்கள் எப்படி போவது. இந்த கேள்வியே தேவையில்லாதது. ஒட்டு மொத்த மக்களின் எண்ணமும் அதுதான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத நிலையிலும் நடராஜன் மறைவு பற்றி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் 4வது பக்கத்தில் பட்டும் படாமலும் ஒரு சிறிய செய்தியை வெளியிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications