அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் டிஸ்மிஸ்!
சென்னை: அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக அரசில் ஐவர் அணியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன். ஆனால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் ஆட்சியின் கடைசி காலத்தில் நத்தம் விஸ்வநாதன் ஓரம்கட்டப்பட்டார்.

சட்டசபை தேர்தலில் அவரால் வெல்ல முடியாத அளவுக்கு ஆத்தூர் தொகுதியில் திண்டுக்கல் ஐ. பெரியசாமியை எதிர்த்து நிற்க வைத்தார் ஜெயலலிதா. அவர் எதிர்பார்த்தபடியே நத்தம் விஸ்வநாதன் வெல்லவில்லை.
அவரிடம் இருந்த திண்டுக்கல் மாவட்ட செயலர் பதவியையும் பறித்தார் ஜெயலலிதா. திடீரென நத்தம் விஸ்வநாதனை அதிமுக அமைப்புச் செயலராக்கினார்.
நத்தம் விஸ்வநாதனின் நண்பர் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருந்தனர். இதனிடையே இன்று நத்தம் விஸ்வநாதனின் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications