கருணாநிதி மறைவு.. தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது தேசியக்கொடி
கருணாநிதி மறைவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கருணாநிதி மறைவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர். 13 முறை சட்டசபை உறுப்பினராக பதவி வகித்தவர் கருணாநிதி.

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications