தற்கொலை பேச்சு தேவையா நவநீதகிருஷ்ணன்.. இப்போ எப்படி பக்கவிளைவுகள் வருகிறது பாருங்க!
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என ராஜ்யசபாவில் பகிரங்கமாக அறிவித்தார் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்.
இவரது பேச்சு பல்வேறு கட்சிகளில் இருந்து எதிர்விளைவுகளை கிளப்பிய நிலையில், இப்போது பக்கவிளைவுகளும் பயங்கரமாக வரத் தொடங்கியுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக இரு வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கியது அதிமுக. இதன் உச்சம், நவநீதகிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள்.

தற்கொலை நிலை
தங்கள் கோரிக்கை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் பேசினார். முதலில் ராஜினாமா செய்யுங்கள், தற்கொலை பேச்சு திசைமாற்றும் செயல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன.

கேலி, கிண்டல்
நேற்று பேட்டியளித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தற்கொலை என்பதை எதிர்ப்பவர்கள் நாங்கள். அதிலும் இதுபோன்ற தற்கொலை பேச்சு பித்தலாட்டம் என பேட்டியளித்தார். இப்படி பல்வேறு கட்சி தலைவர்களும், நவநீதகிருஷ்ணன் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்தபடி உள்ளனர்.

இன்னும் நடக்கலியே
இந்த நிலையில், நெட்டிசன்களும், தற்கொலை பேச்சை கேலி செய்து வருகிறார்கள். திமுக சீனியர் தலைவர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டியில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்துவிட்டது. இன்னும், அந்த சேதி கேட்கவில்லையே என்று, நவநீதகிருஷ்ணன் பேச்சை வைத்து மறைமுகமாக கேலி செய்தார். நெட்டிசன்கள் அதிமுக எம்பிக்கள் போட்டோக்களை ஷேர் செய்து இதேபோன்ற கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.

பக்க விளைவுகள்
இப்படி எதிர்விளைவுகள் ஒருபக்கம் என்றால், எம்.பி. ஆபீசுக்கு எலி மருந்தை அனுப்ப ஆரம்பித்துள்ளனர் சிலர். இது நவநீதகிருஷ்ணன் பேச்சின் பக்க விளைவு. பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் அலுவலகத்திற்கு யாரோ எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை, இப்போது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வி சாமானியர்களிடமிருந்து கூட அதிமுக எம்.எபிக்களை விரட்ட கூடும். அதற்கான விதையை நவநீதகிருஷ்ணன் போட்டுவிட்டது பிற எம்.பி.க்களும் தலை வலிதான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications