சட்டசபை தேர்தலிலும் பாஜக கூட்டணி தொடரும்; அதிமுகவையும் மக்கள் ஓரம் கட்டுவார்கள்: அன்புமணி
தருமபுரி: தமிழக சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்று நடைபெற்று, முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்ற அன்புமணி ராமதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தருமபுரி மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி வேறுபாடு, ஜாதி வேறுபாடு பார்க்காமல் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்.

என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன். தருமபுரிக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்து வளர்ச்சிக்காகவும் நானும், கன்னியாகுமரியில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும் இணைந்து செயலாற்றுவோம். இதைவிட பெறிய வெற்றியை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. அதே நேரம் திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இனிமேல் திமுகவை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுக, திமுக தயவு இல்லாமல் தமிழகத்தில் இரண்டு இடங்களை பிடித்துள்ளது வரலாற்று சாதனை.நரேந்திரமோடி யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சியமைக்க போகிறார். அவரோது நாங்களும் சேர்ந்து தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். அதிமுக 37 தொகுதிகளை பெற்றிருந்தாலும் அதனால் எந்த பிரயோஜனும் கிடையாது. அடுத்த சட்டசபை தேர்தலில் இதே கூட்டணி தொடரும். இப்போது திமுகவை மக்கள் ஓரம்கட்டியதுபோல அப்போது அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications